#970 - *சவுல் ஏன் தாவீதை கொலை செய்யும்படி வகை தேடினார்??* விளக்கம்
வேண்டும் ஐயா??
*பதில்*
விக்கிரக
ஆராதனை செய்யும் பெலிஸ்தியனான கோலியாத்துக்ககு எதிராக வீர தீர வெற்றியைப் பெற்ற
பிறகு இளம் தாவீதின் புகழ் தேசம் முழுவதும் பரவியது.
இஸ்ரவேல்
பெண்கள் ராஜாவகிய சவுலை – ஆட்டு மேய்ப்பனான இளம் தாவீதின் நிழலில் கீழ் தள்ளும் படியாக
பாடலலை இயற்றி பாடினார்கள். 1சாமு. 18:6-7
அந்த
வரிகள் இராஜாவாகிய சவுலுக்கு எரிச்சலாயிருந்தது. 1 சாமு. 18:8
அந்த
நிகழ்விலிருந்து சவுலுக்கு தாவீது மீது ஒரு தவறான தீய பார்வை இருந்தது. 1சாமு. 18:9
சவுல்
பொறாமையால் தன் நிலையில் நிற்கமுடியவில்லை. பல சந்தர்ப்பங்களில், அவர் அந்த இளைஞனை
நேரடியாகக் கொல்ல முயன்றார். 1சாமு. 18:11; 1சாமு. 19:10.
மேலும்
பொறாமையானது மிகவும் மோசமானதான திட்டங்களை வகுக்க தூண்டியது (1சாமு. 18:21,25).
பிடிவாதம், அகங்காரம், பொறாமை குணங்கள் மோசமான கூட்டணியாகும். ஒன்றுக்கொன்று கைக்கோர்த்துக்கொண்டு
மற்றவர் வாழ்க்கையை ஜெயிப்பதாக நினைக்க வைத்து சொந்த வாழ்க்கையை பாழாக்கிவிடும்
என்பதற்கு சவுல் ஒரு தெளிவான உதாரணம்.
இது
போலவே சபையில் ஒருவர் சில தாளந்துகளைக் கொண்டு வளர்ந்து வருவதை காணும் போது – முன்னிற்பவர்கள் அவர்களை இன்னும் வளர்க்க உறுதுணையாக
இருக்க வேண்டியது பாடம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக