#971 - *கர்த்தரை எப்படி ருசிப்பது?*
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 34:8
*பதில்*
சங்கீதக்காரரின் சொந்த அனுபவத்தில் எழுதப்பட்ட அருமையான உணர்வுள்ள வார்த்தை.
உண்ணும் போது உணவில் சிந்தனை இருந்தால் பொதுவான சுவையை உணரலாம்.
அதாவது கவனம் இல்லாவிட்டாலும் உப்பு துவர்ப்பு இனிப்பு காரம் போன்றவை உடனடியாக எவர்க்கும் தெரிந்து விடும்.
ஆர்வத்தோடு தீர உணர்ந்து மெதுவாக அமைதியாக பொருமையாக ஒரே ஒரு பொட்டு உணவை நாவில் வைத்து கவனித்து ஆராய்ந்தால் – அந்த பொட்டு உணவின் ருசியில் இருந்தே
கடுகு வெடித்ததா,
வெங்காயம் வதங்கியதா,
மசாலா போதுமான அளவில் போடப்பட்டுள்ளதா,
அதன் விகிதாச்சாரம் மற்ற காய்களில் சரிவர கலந்துள்ளதா,
மிளகாய் எண்ணெயில் வதங்கியதா அல்லது வெங்காயத்தோடு போடப்பட்டதா என்று இன்னும் ஒவ்வொரு சுவையும் தனித்தனியே சொல்லமுடியும்.
ஆழ்ந்த கவனம் இருந்தால் இந்த வித்தியாசத்தை சுலபமாக உணராம்.
இந்த சங்கீதத்தின் ஆரம்பத்தில் உள்ள முதல் 7வசனங்களை கவனித்தால் இந்த பாடல் ஆசிரியர் எவ்வாறு தேவனை கவனித்தார் என்பதை உணரலாம்.
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் *வாயிலிருக்கும்*. சங் 34:1
கர்த்தருக்குள் என் ஆத்துமா *மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள்* அதைக்கேட்டு மகிழுவார்கள். சங் 34:2
என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. சங் 34:3
நான் கர்த்தரைத் *தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்*. சங் 34:4
அவர்கள் அவரை *நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்*; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங் 34:5
இந்த *ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்*. சங் 34:6
கர்த்தருடைய தூதன் *அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி* அவர்களை விடுவிக்கிறார். சங் 34:7
எதிர்பார்ப்பு ஒருபக்கம் – அது எவ்வாறு சந்திக்கப்பட்டது என்பதை அறிந்து மறுபக்கம் என்று அருமையான ஒரு சங்கீதம்.
பல நேரங்களில் நம் தேவைக்காக நாம் தேவனிடத்தில் ஜெபிப்போம். அது நடந்தேறியது – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்லிவிடுவது வழக்கம். ஆனால் அந்த வெற்றியை ஆராய்ந்து அங்குளம் அங்குளமாக அளந்து தேவன் எவ்வாறு ஒவ்வொரு தருணத்தையும் நமக்கு சாதகமாக மாற்றினார் எப்படி யாரெல்லாம் நம்மை சார்ந்து இருக்க வைத்தார் என்று யோசித்து பார்க்கும் போது சரீரம் புல்லரிக்கும் !! தேவன் எவ்வளவு மகத்துவமானவர் என்பதை சொல்லி நிறையாது. சங் 145:7
இங்கே “சுவை” என்ற சொல் எபிரேயத்தில் தாஆம் என்பதாகும். அதாவது எதையும் சுவைக்க முயற்சிப்பது.
வாய் போஜனத்தை ருசிப்பது போல செவியானது வார்த்தைகளை சோதிக்கிறது என்கிறார் யோபு 12:11.
இது ஒரு சோதனை (ஆராய்ந்து அறியும்) அனுபவம் என்றே சொல்லமுடியும்.
தேவன் மீது முழுமையான நம்பிக்கை வைப்பதன் மூலம் – தேவனுடைய ஆசீர்வாதங்களை முழுமையாக உணரமுடியும் என்கிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக