திங்கள், 25 மே, 2020

#966 - மாம்சமும் இரத்தமும் பரலோகத்தை சுதந்தரிக்காது என்றால் ஏனேக்கும் எலியாவும் எப்படி போனார்கள்?

#966 - *மாம்சமும் இரத்தமும் பரலோகத்தை சுதந்தரிக்காது என்றால் ஏனேக்கும் எலியாவும் எப்படி போனார்கள்?*

*பதில்*
மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை. 1கொரி. 15:50

சரீரம் மண்ணுக்கு திரும்பவேண்டும் – ஆதி. 3:19, யோபு 21:26, 34:15, சங். 104:29

பவுல் கொரிந்தியருக்கு எழுதும் போது – மண்ணானது புதைக்கப்படுகிறது என்றார். 1கொரி. 15:42, 44

மேலும் கிறிஸ்துவின் வருகையில் மரித்தோருக்கும் உயிருள்ளோருக்கும் மண்ணான சரீரம் மாற்றப்பட்டு சடுதியில் அழிவில்லாத சரீரம் கொடுக்கப்படுகிறது என்றும் பார்க்கிறோம். 1கொரி. 15:51, பிலி. 3:21.

எனவே, மக்கள் உடல் ரீதியாக சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வதில்லை. இவை ஆன்மீக இடங்கள், உடல் இடங்கள் அல்ல.

நீங்கள் கேட்ட பட்டியலில் இயேசு கிறிஸ்துவையும் நான் சேர்க்கலாம்.

அவர்கள் சரீரம் மாற்றப்பட்டதா என்பதை வேதம் நேரடியாக சொல்லவில்லை.

மேற்கண்ட வசனத்தின்படி மாமிசம் பரலோகம் போகாது என்பது திண்ணம்.

இயேசு கிறிஸ்து வரும்போது ஒரு க்ஷனத்தில் இது நடக்கு முடியும் என்றால் – இவர்கள் அன்று எடுத்துக்கொள்ளப்படும் போதும் வழியில் அந்த மறுரூபம் நடந்திருக்கும் என்று நம்புவதில் எந்த பிரச்சனையுமில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக