*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நாம் எப்போதும் ஆனந்தமாய் இருக்கத்தக்கதாக தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சமாதானத்தின் தேவனை நாம் தொழுது கொள்ளும் போது சமாதான குறைச்சல் ஏன் வருகிறது?
யாக்கோபு 1:14ன்படி, வாழ்க்கையில் சமாதானமின்றி இருப்பது அவரவர் செயல்களே.
அதீத ஆசை,
அதீத எதிர்பார்ப்பு,
தேவ பயமின்மை,
நம்பிக்கையற்ற ஜெபங்கள் இப்படி பலவும் இதற்கு காரணங்கள்.
உட்கார்ந்த இடத்திலேயே சுகமாய் சாப்பிட்டு வாழ்ந்த வாழ்கையை *கோபத்தினால்* இழந்தார் காயீன். ஆதி. 4:5-8
*வைராக்கியதினாலும், வறட்டு கோபத்தினாலும்*, ராஜாங்கத்தையே இழந்தான் பார்வோன். யாத். 10:11; 10:28
தன்னை மொர்தெகாய் மதிக்கவேண்டும் என்ற வரட்டு கவுரவத்தினால் (வரட்டு எதிர்பார்ப்பினால்) ஆமான் மரித்தே போனான். எஸ்தர் 3:5
பல நேரங்களில்,
நமக்கு ஏற்படும் இடர்பாடுகளை பொறுக்க மனமில்லாமல் வெகுண்டு எழுந்து விடுவதால், தற்போது இருக்கும் ஆசீர்வத்தையும் இழக்க நேரிடும்.
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் *பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது*. எபி 10:36
இருப்பதை மேன்மையாக தக்கவைத்துக்கொள்ளும்போது, இன்னும் அதிகமான ஆசீர்வாதத்தை பெறுவது நிச்சயம். லூக்கா 19:17
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில : http://kaniyakulamcoc.worldbibleschool.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக