#915 - *ஏன் “வலது” விற்கு இத்தனை முக்கியத்துவம்?* வலது கண் என்று சொல்லப்பட்டிருக்கிறது....வலது காது அதுபோல “*வலது*” என்று மத் 25:33.. உன் *வலது* கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப்
பிடுங்கி எறிந்துபோடு, உன் சரீரம் முழுவதும் நரகத்தில்
தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று
கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். மத்தேயு 5 :29
*பதில்*
வலது
பக்கம் - வழக்கமாக *அனைவரும்* விகிதாசாரத்தின்படி உபயோகிக்கும் பகுதி.
வெகு
சிலரே – இடக்கை பழக்கம் உடையவர்கள்.
நம்
சமுதாயத்தில் சுமார் 200 அல்லது 500 பேருக்கு மத்தியில் ஒருவர் இடது கை பழக்கம்
உள்ளவராக இருப்பர். உலக கணக்கெடுப்பின்படி 90 சதவீதத்தினர் வலப்பக்கம் பழக்கமுடையவர்
என்று சொல்லப்பட்டுள்ளது.
வலது
என்பது *மனிதனின் பார்வையில்*:
சரியானது, பலமுள்ளது, நீதியுள்ளது, வலிமைவாய்ந்தது, நேர்மையானது,
ஆசீர்வதிக்க தகுதியானது என்ற எண்ணம் உண்டு. ஆதி. 48:13, 14,
18,
வலது
கரம் அதிகாரம் இருப்பதாக புரிந்து கொள்கிறது – யாத். 15:6, 12
வலது
பக்கம் – ஞானம் இருப்பதாக புரிந்து கொள்கிறது – பிர. 10:2
இயேசு
கிறிஸ்துவானவர் – பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பது – ஆளுமையை குறிக்கிறது – அப்.
7:55
ஆங்கில
வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்தால் இன்னும் இலகுவாகும் ..
வலது
= ரைட் (அதாவது சரியானது)
இடது
= லெஃப்ட் (அதாவது சரியானது போக மீந்திருப்பது)
நீதி
= *ரைட்*ஷியஸ் (*Right*eous)
மனிதன்
தனக்கு
நீதி
என்றும்
சரி
என்றும்
மெஜாரிட்டி
என்றும்
மேலானது
என்றும்
அநேகர்
பின்பற்றுகிறார்கள் என்றும்
பலம்
என்றும்
நேர்மை
என்றும்
ஆளுமை
என்றும் பாராமல்
எதையும்
எதுவும் பரலோகம் போவதற்கு தடையாய் இல்லாதபடிக்கு அதை எறிந்து போடு என்கிறார்.
நாமோ
வலது இடது என்று பாராமல் – கிறிஸ்தவர்களாகிய நாம் வேதத்தின் நடைமுறை சத்தியத்தை, கிறிஸ்துவின் போதனையை
மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க வேண்டும். 1கொரி. 3:19, யோசு.
1:7, நீதி. 4:27, ரோ. 12:9
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக