வியாழன், 30 ஏப்ரல், 2020

#914 - ரோமர் புத்தகத்தின் முகவுரை தரவும்.

#914 - *ரோமர் புத்தகத்தின் முகவுரை தரவும்*

*பதில்*
மேலோட்டமாக அல்லாமல் விசுவாசத்தில் வளர்ந்து ஆழமாக வேர் விடவேண்டும் என்பதே கேள்விக்கு வேதாகமத்திலிருந்து பதில் என்ற இந்த குழுவின் நோக்கம்.

ஏற்கனவே வெளிபடுத்தல் புத்தகத்தின் முகவுரை எழுதினேன். இப்போது ரோமர் !!

புத்தகத்தின் முகவுரை என்பது வளர்ந்தவர்களுக்கே உதவும்.

ஆகவே கேள்விக்கு பதில் எழுதுவதோடு என்னை கட்டுப்படுத்திக்கொள்வது அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இலகுவாக புரிந்து கொள்ளும் வண்ணம் ரோமர் புத்தகத்தின் சுருக்கமான முகவுரை / வரையுறை :

1. எழுத்தாளர் – பவுல் (ரோ 1:1-2), பவுல் சொல்வதை எழுதும்படி உதவியவர் தெர்தியு (16:22)

2. யாருக்கு எழுதப்பட்டது : ரோமாபுரியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு (ரோ 1:2)

3. எழுதப்பட்ட காலம் : பவுல் தனது 3வது சுற்றுப்பணத்தின் இறுதியில் எழுதப்பட்டது - சுமார் 57-58 கி.பி (அப் 18:23 - 21:14, ரோ 15:19-24)

4. எழுதப்பட்ட இடம் : கொரிந்து (ரோ 15:25)
பெயர்கள் பட்டியலில் பல (ரோ 16: 21-23) கொரிந்துவில் உள்ளவர்கள்.

5. சுருக்கமான தலையங்கம்:
a. கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள் - அத்தியாயங்கள் 1-11
b. நடைமுறை வாழ்க்கை - அத்தியாயங்கள் 12-16

6. முக்கிய கருப் பொருள் : நாம் விசுவாசத்தினால் நீதியாக்கப்படுகிறோம், பரிசுத்த ஆவியினால் பரிசுத்தப்படுத்தப்படுகிறோம்.

7. முக்கிய திறவுகோல் வசனங்கள்: ரோ 1:16-17 மற்றும் ரோ 3:21-25

“விரிவான தலையங்கம்”:
அறிமுகம் (1: 1-17)
1. வாழ்த்துதல் 1-7
2. உரையாற்றியவர்களிடம் பவுலின் அணுகுமுறை 8-15
3. நோக்கம் 16-17

கலந்துரையாடல் (1:18 - 15:13)
1. புத்தகத்தின் கோட்பாட்டு பகுதி 1:18 - 11:36

a. கிறிஸ்துவின் நற்செய்தி
i. அதற்கான தேவை 1: 18-3: 20
ii. அதன் உண்மை 3: 21-31
iii. அதன் இயல்பு 4 அத்தியாயம்
iv. அதன் மகிழ்ச்சி 5 ஆம் அத்தியாயம்
v. அதன் அதிகாரம் 6 ஆம் அத்தியாயம்

vi. அதன் நிர்வாகக்காரணி 7, 8 அத்தியாயங்கள்
1. மோசேயின் நியாயபிரமானம் அல்ல - அத்தியாயம் 7
2. கிறிஸ்துவின் ஆவியின் சட்டமே - அத்தியாயம் 8

vii. நிராகரிப்பதில் மாம்சீக இஸ்ரவேலரின் நிராகரிப்பில் உள்ள  நிலைமை - 9, 10, 11

2. புத்தகத்தின் - நடைமுறை பகுதி (12:1 - 15:13)
a. கிறிஸ்துவின் நற்செய்தி, அதன் பயன்பாடு
i. அடிப்படை அணுகுமுறைகளில் 12:1-3
ii. தனிப்பட்ட செயல்பாடுகளில் 12:3-8
iii. அன்றாட தனிப்பட்ட வாழ்வில் 12:9-12
iv. சிவில் அதிகாரிகளுடனான உறவில் 13:1-7
v. ஒருவருக்கொருவர் அக்கறை 13:8-10
vi. கிறிஸ்தவரின் அநுதின நடை 13:11-14
vii. விஷயங்களில் அலட்சியம் 14:1 - 15:3
viii. கிறிஸ்துவைக் கருத்தில் கொண்டு 15: 3-12
ix. நம்பிக்கையை வழங்குவதில் 15:13

முடிவுரை (15:14 - 16:27)
1. தூண்டுதல் 15:14
2. நினைவுக்கூறுதல் 15:15-16
3. புறஜாதியார் 15:16-24
4. பரிசுத்தவான்களுக்கு உதவி செய்தல் 15: 25-27
5. தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் நம்பிக்கைகள் 15: 28-29
6. ஜெபிக்கும்படியான வேண்டுகோள் 15: 30-33
7. பெபேயாளை பாராட்டுவது 16:1-2
8. வணக்கங்கள் 16: 3-16
9. எச்சரிப்பு 16:17-20
10. வாழ்த்துக்கள் 16: 21-24
11. தேவனுக்கு மகிமை செலுத்துதல் 16: 25-27

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக