வெள்ளி, 1 மே, 2020

#916 - ஆவியே உயிர்ப்பிக்கிறது - விளக்கவும்

#916 - *ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. யோ 6:63 - வசனத்தை விளக்கவும்*

*பதில்*
60ம் வசனத்தை படிக்கும் போது இந்த வசனத்தின் பின்னணியை புரிந்து கொள்ளலாம்.

இந்த வார்த்தைகள் வெவ்வேறு வழிகளில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. இங்கே "ஆவி" என்ற வார்த்தை பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கவில்லை.

"நான் உங்களிடம் பேசும் வார்த்தைகள் ஆவியாயிருக்கிறது" என்றார்.

அவர்களின் கருத்துக்களுக்கும் ஆசைகளுக்கும் எதிராக அவர் கற்பித்த கோட்பாட்டை அவர் இங்கே குறிப்பிடுகிறார்.

“என் கோட்பாடு ஆத்துமாவிற்குறியது; என் வார்த்தைகள் ஆத்துமாவை போஷிப்பதாகும் என்றார்.

உங்கள் கோட்பாடு அல்லது உங்கள் கருத்துக்கள் பூமிக்குரியவை, அவை மாம்சத்திற்கும் மாம்சீகத்திற்கும் மாத்திரமே பிரயோஜனமுள்ளது என்றார்.

மோசே (மன்னாவின்) மூலம் உணவளித்தது உடலுக்கு ஏற்றவை என்று தெரிந்து அதற்கு அதிக மதிப்பீட்டை கொடுக்கிறீர்கள்; ஆனாலும் அது நிரந்தரமாக இருந்ததில்லை. ஏனென்றால் உங்கள் பிதாக்கள் இறந்துவிட்டார்கள். யோ. 6:31-32

நீங்கள் என்னிடமிருந்தும் உணவை நாடுகிறீர்கள், ஆனால் உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும் ஆசைகளும் மொத்தமாகவும் பூமிக்குரியதாகவும் இருக்கின்றன. யோ. 6:26

ஆகவே இவ்வுலக வாழ்விற்காக கிறிஸ்துவைத் தேடாமல் – நித்திய வாழ்விற்காக அவரை ஏற்றுக்கொண்டு அவர் கட்டளையின்படி இவ்வுலகத்தில் வாழ்ந்து நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். யோ. 3:16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக