கிருபையுள்ள தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
தன்னோடு அன்போடு இருந்து தினமும் கூடவே உலாவி, தன்னிடம் அன்பு பாராட்டி மனிதர்கள் தன்னை தொழுதுகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஏசா 43:21
அப்படி நடந்துவிடக்கூடாது என்று பிசாசு ஆரம்பத்திலேயே
முதல் தம்பதியை ஏவாள் மூலமாக தடை செய்தான் (ஆதி 3:1)
தேவன் எச்சரித்த பின்பும் கூட(ஆதி 4:6), முதல் மகன் காயீன், கொலை காரனானான் (ஆதி 4:8)
இரண்டாவது மகன் ஆபேல் கொலை செய்யப்பட்டான். (ஆதி 4:8)
இருந்த போதும், தேவன் தான் விரும்பினதை இயேசு கிறிஸ்து மூலமாக நிறைவேற்றினார்.
பிசாசு – நமக்கு இருக்கும் சிலுவையை விட்டு இறங்கி வர சொல்லுவான் (கஷ்டங்களை உதறிவிட்டு ஓட சொல்லுவான்) - மத் 27:40
கீழே குதி பார்க்கலாம் என்று ஆலோசனை கொடுப்பான் (பொருப்புகளை தட்டி கழிக்க சொல்லுவான்). மத் 4:6
இரவு பகல் பாராமல் கூடவே இருந்தவர்களை வைத்து சபிக்கவும் மறுதலிக்கவும் வைப்பான். (நேசித்தவர்கள் கூட வெறுக்க வைப்பான்) மத் 26:74
ஆனால் நாம் எந்த சூழ்நிலையிலும் அழைக்கப்பட்ட அழைப்பை கைவிட்டு விடாமல் நம்மை காத்துகொள்ளுவோம். 1தீமோ 6:12
நமக்கென்று தேவன் நியமித்த ஓட்டத்தின் பொறுமையாய் ஓடவேண்டும் என்பதை மறந்து போக வேண்டாம். முட்கள் இருக்கும், சிலுவை இருக்கும், போராட்டம் இருக்கும், வேதனை இருக்கும்.. .ஆனாலும் அதையெல்லாம் கடந்து வந்தால் தான் – ஜெயக்ரீடம் கிடைக்கும். எபி 12:2-3
நம்மை அழைத்தவர் உண்மையானவராயிற்றே – சூழ்நிலைகள் நம்மை அவரிடம் இன்னும் அதிகமாய் கிட்டிச் சேர்க்கும்..எபி 12:1
Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
அனைத்து கேள்வி பதிலும் காண:
https://joelsilsbee.wordpress.com/qa/
https://joelsilsbee.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக