#934 - * நீதியின் வாசல் – கர்த்தரின் வாசல் விளக்கவும்*
சங். 118:19 நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
சங். 118:20 கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.
*பதில்*
*நீதியின் வாசல் :*
எருசலேம் தேவாலயத்தின் வாசலை குறிப்பது இந்த நீதியின் வாசல்.
ஏசா. 26:2 சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்.
வீட்டின் வாசல்கள் நீதியுள்ள தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.
நீதியின் கொள்கைகள் பலப்படுத்தப்பட்ட ஒரு வீட்டின் வாசல்கள், மற்றும் இருதயத்தின் நியாயமான உணர்வுகள் பாராட்டு மொழியில் இந்த பாடலில் வெளிப்படுத்தப்படுகிறது.
*கர்த்தரின் வாசல் :*
இதுவும் எருசலேம் தேவாலயத்தின் வாசலை குறிப்பதே.
நீதிமான்கள் கர்த்தரை தொழுதுக் கொள்ளும்படி எருசலேம் தேவாலயத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்று பாடல் ஆசிரியர் இயற்றியிருக்கிறார்.
கிறிஸ்துவின் சிலுவைக்குப் பின்னர் இருக்கும் இந்த புதிய ஏற்பாட்டுக் காலத்தில் கட்டிடம் அல்ல நாமே ஆலயமாக இருக்கிறோம்.
பிதாவினிடத்தில் சேர கிறிஸ்துவே வழியாக (வாசலாக) இருக்கிறார். யோ 14:6
இயேசு தான் பிதா – பிதா தான் இயேசு என்று வாதாடுபவர்களுக்கு யோவான் 14:6, கொலோ 3:1, ரோ 8:34, 1பேது 3:22, எபி 12:2 போன்ற இன்னும் அநேக வசனங்கள் மனப்பாடமாக தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் கடினப்பட்டிருக்கிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக