செவ்வாய், 28 ஏப்ரல், 2020

#909 - முதலாவது நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் – பின்னர் நான் தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லுங்கள்”

#909 - *பழைய ஏற்பாட்டிலும், 4 நற்செய்திகளிலும், "உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்கவும், உங்கள் பிறனையும் நேசிக்கவும்" என்று கூறப்பட்டுள்ளது.*

இயேசு கூறுவதும் அல்லாமல் மற்ற எல்லா அத்தியாயங்களிலிருந்தும் "உங்கள் அயலாரை நேசி" என்று சொல்லப்பட்டுள்ளது.

தேவனை நேசிக்கவேண்டும் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

எனது கேள்வி என்னவென்றால்,
"முதலாவது நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் – பின்னர் நான் தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்பது.

என் நண்பரோ மனிதனுக்கு முதல் முன்னுரிமை கொடுப்பது தவறு என்று கூறுகிறார். எப்போதும் தேவனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று... அது போல நானும்..

All thru the old Testament and upto 4 gospels, its said to "love the lord your GOD and love your neighbors". “Jesus Himself says and from then all other chapter says "love your neighbors". It reveals that you love God. So, my question is,
is that ultimately wrong if i say "FIRST LOVE ONE ANOTHER, THEN YOU SAY YOU ARE LOVING THE LORD GOD"

My friend says giving first priority to human is wrong, always u must love God in first place. So iam

*பதில்*

நற்செய்தி (சுவிசேஷம்) என்பது ஒன்று தான். நான்கு சுவிசேஷங்கள் என்றோ நான்கு நற்செய்தி என்றோ நாம் சொல்லி பழக்கூடாது !!

சுவிசேஷம் அல்லது நற்செய்தி என்றால் என்ன?
அது கர்த்தருடைய சிலுவை மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலை குறித்து சொல்வது சுவிசெஷம் அல்லது நற்செய்தி. 1கொரி 15:1-4

இந்த கேள்வி ஏதோ இலகுவானது போல இருந்தாலும் – நடைமுறையில் மிகக்கடினமான ஒன்று என்று நான் தைரியமாக சொல்லமுடியும் !!

முதலாம் பிரதான கற்பனை – என்று இயேசு சொன்னது “Mar 12:30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. (மாற்கு 12:29-30) என்பது.

இரண்டாம் கற்பனை என்று சொல்லவில்லை !! நன்கு கவனிக்க வேண்டும்..

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்று சொன்னார் - அது, உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. (மாற்கு 12:31)

தேவனிடத்தில் முழுமையாய் கொடுக்கவேண்டும் !!

அதாவது
முழு இருதயத்தோடும்,
முழு ஆத்துமாவோடும்,
முழு மனதோடும்,
முழுப் பலத்தோடும்
அன்பு கூறவேண்டும்..
இப்படி முழுமையாக அங்கு கொடுத்துவிட்டால் மீதி என்ன இருக்கும்?

நம்முடைய புரிந்து கொள்ளுதலில் சிறிய வேறுபாடு உள்ளது.

தேவனிடத்தில் அன்பு கூறவேண்டும் என்றால்?
வேதாகமத்தை
இதயத்தோடு கட்டிப்பிடிப்பதம்,
முத்தம் செய்துக்கொள்வதும்,
எந்நேரமும் - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்,
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்று உச்சரிப்பதும், எப்போதும் இயேசுவே ஆண்டவரே அப்பா தேவனே என்று சொல்லிக்கொண்டேயிருப்பதுமா?

இந்த வசனத்தை பரிசுத்த ஆவியானவர் யோவான் அப்போஸ்தலன் மூலம் நமக்கு நன்கு புரியும்படி இலகுவாக்கியிருக்கிறார்:

1-இயேசு தான் கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்;

2-பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.

3-நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய “*கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று*” அறிந்துகொள்ளுகிறோம்.

4-நாம் *தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்*; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.

5-தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (1யோ 5:1-5)

6-இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?

ஆம்.... கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிவது – தேவனிடத்தில் அன்பு கூறுவது.

கிறிஸ்துவின் கட்டளை என்ன?
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். ... என்றார். மத் 28:18-20

நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. 1யோ 3:23

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். யோ 13:34-35

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். யோ 15:17

கட்டளைக்கு கீழ்படிவது அன்பு. கிறிஸ்துவின் அன்பை மற்றவருடன் பகிர்ந்துகொள்வது “அன்பை வெளிப்படுத்துவது”. சகோதரருக்குள் ஒற்றுமையை வெளிப்படுத்துவதில் தேவனுடைய அன்பு விளங்குகிறது.

வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். 1யோ 3:18

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. 1பேது 1:22-23

அயலாரிடத்தில் காண்பிக்கும் அன்பிற்கு தேவனிடத்தில் காண்பிக்கும் அன்பிற்கும் வேறுபாடு உள்ளது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக