புதன், 29 ஏப்ரல், 2020

#910 - புருஷரின் உடையை ஸ்திரீகள் தரிக்கலாகாது என்ற வசனம் புதிய ஏற்பாட்டு காலத்துல பின்பற்றனுமா.... இப்போ...

#910 - *புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். உபாகமம் 22:5 என்ற இந்த வசனம் இன்னும் நடைமுறையில் இருக்க, அதாவது புதிய ஏற்பாட்டு காலத்துல பின்பற்றனுமா?*

*பதில்*
நியாயபிரமாணம் இப்போது இல்லாததால் உபா. 22:5ம் வசனம் பொருந்துமா என்பதாக நீங்கள் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

கீழே உள்ள பதிவை கவனிக்கவும்:
இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த 10+603=613 கட்டளைகளில் பிரதானமாக இரண்டு வகைப்படும்.

ஒன்று தொழுகை முறைக்கானது.
மற்றொன்று ஒழுக்க முறைக்கானது.

உதாரணத்திற்கு :

ஓய்வு நாளை ஆசரிப்பாயாக என்ற கட்டளை தொழுகை முறை காலத்திற்குட்பட்டது. (ஓய்வுநாளுக்கும் ஆண்டவரான இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப்பின் இராஜ்ஜிய்த்திற்கான கிறிஸ்துவின் கட்டளைக்கிணங்க அப்போஸ்தலரின் வழிநடத்துதலின்படி நாம் ஓய்வு நாள் அல்ல வாரத்தின் முதல் நாளில் கடைபிடிக்கிறோம். அப். 1:3, அப். 20:7, 1கொரி. 16:1-3)

சர்வாங்க தகனபலி, சமாதானபலி, பாவநிவாரணபலி போன்றவைகள்  பலிகள் அனைத்தும் தொழுகை முறை காலத்திற்குட்பட்டது – கிறிஸ்துவின் சிலுவைமரணத்தோடு அதுவும் நிறைவுற்றது – ரோ. 10:4

தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக, களவு செய்யாதிருப்பாயாக போன்றவை ஒழுக்கத்திற்கான பிரமாணங்கள். இவை எந்த காலத்திலும் அனைவருக்கும் பொருந்துகிற பொதுவான ஒழுக்க நெறிகள்.

நீங்கள் குறிப்பிடும் உபா. 22:5ம் வசனம் உடைகளை குறித்த வசனம்.
உபா. 22:5 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

இது ஒழுங்கு முறை கட்டளை – எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. மேலும் புதிய ஏற்பாட்டிலும் இதற்கான அவசியத்தை கலாச்சாரத்துடன் வலியுறுத்தப்படுகிறதை நாம் காணலாம்.

1தீமோ. 2:9-10, 1பேதுரு 3:2-5 வசனங்களில் தகுதியான வஸ்திரம் என்று சொல்லப்படுகிறது.

மறுபாலர் தன்னை பார்க்கும் போது ஆபாசமோ இச்சையோ பாவதூண்டுதலோ உண்டாகாத அளவிற்கு எந்த ஆணும் பெண்ணும் தங்கள் உடையையும் அலங்காரத்தையும் காத்துக்கொள்வது அவசியம். மத். 5:28

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக