வியாழன், 23 ஏப்ரல், 2020

#894 - உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன். சங்கீதம் 81:10 இந்த வசனத்தின் விளக்கம் வேண்டும்?

#894 -  *உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்*. சங்கீதம் 81:10 -  இந்த வசனத்தின் விளக்கம் வேண்டும்?

*பதில்*
கஷ்டத்திலும் அடிமைத்தனத்திலும் துன்பத்திலும் நெருக்கத்திலும் அளவு ஆகாரத்திலும் வாடின தன் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்பட செய்தார் வல்லமையுள்ள தேவன்.

நீங்கள் எனக்கு செவிகொடுங்கள் என்றார் – சங். 81:8

அந்நிய தெய்வங்களை நீ நமஸ்கரிக்கவும் கூடாதென்றார் – சங். 81:9

நெருக்கத்திலே நீ கூப்பிட்டபொழுது நானல்லவா உன்னை தப்புவித்தேன், அறிந்தேன் பதிலளித்தேன் என்று நினைவூட்டுகிறார் – சங். 81:7

உன் கடினமான வேலையை நான் விலக்கினேன் – சங். 81:6

அப்படி நான் அவர்களை காப்பாற்றின போதும் என்னை விட்டு விலகினார்கள் என்றார் – சங். 81:11-13

என் சத்தத்திற்கு செவிசாய்த்து என் பக்கம் திரும்பினால் எப்படி ஒரு குருவி குஞ்சுக்கு அதன் தாயை அல்லது தந்தை ஆகாரத்தை தேடிக்கொண்டு வந்து வாயில் திணித்து சாப்பாடு கொடுக்கிறதோ – நீயும் உன் வாயை என்னை நோக்கி விரிவாய் திறந்தால் - உச்சிதமான கோதுமையினால் போஷித்து; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன் என்கிறார் – சங். 8:13, 16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக