#892 - *எபே. 5:19ல் வரும் சங்கீதங்களினாலும்
கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் என்ற வசனத்தின் மூல வார்த்தையின்படி அதில்
இசைகருவிகள் உள்ளது என்று ஒருவர் சொல்கிறார்* – விளக்கவும்.
*பதில்*
சங்கீதங்களினாலும்
என்ற இடத்தில் சல்மோஸ் என்ற கிரேக்க வார்த்தை தான் பயன்படுத்தியுள்ளார்கள். அதற்கு
இசைக்கருவிகளுடன் கூடிய பாடல் என்ற அர்த்தம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
150
பாடல்கள் அடங்கிய சங்கீத புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலையும் ராகம் அமைத்தும்;
தேவனின்
கீர்த்திகளை உச்சரித்து துதித்து;
அவரின்
வல்லமையையும் மகத்துவத்தையும் கிருபையையும் குறித்து ஒருவருக்கொருவர்
புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் “பாடிக்” கீர்த்தனம்பண்ணி என்று
உள்ளது.
நியாயபிரமாண
காலத்தில் எழுதிய / பாடின பாடல்களை நாம் எப்படி பாட வேண்டும் என்று சொல்லப்படும்
இடத்தில் பாடுங்கள் என்று தான் உள்ளது !! வசனத்தை நன்கு கவனிக்கவும் :
எபே
5:19 சங்கீதங்களினாலும்
கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு,
“உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக்”
கீர்த்தனம்பண்ணி
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
எபே 5:19ல் வரும் சங்கீதங்கள் என்ற வார்த்தையினால் நாம் இசைக்கருவிகளை பயன்படுத்தலாம் என்றார் ஒருவர். அவருக்கு அளித்த பதில் கீழே..
பதிலளிநீக்கு-----*-
அருமை நண்பரே
வசனத்தை கவனமாக படிக்கவும்.
நாம் நினைக்கும் அர்த்தம் வரும்படியாக வளைத்துக் கொள்வது உகந்ததல்ல.
நீங்கள் ஆதியில் குறிப்பிட்ட வசனம் இப்படியாக சொல்கிறது.
Eph 5:19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி...
சங்கீதம் என்ற வார்த்தைக்கு மூல பாஷையில் சல்மோஸ் என்பது சரியே.
மேலும் சல்மோஸ் என்ற வார்த்தைக்கு இசைக்கருவிகளுடன் கூடியது என்ற அர்த்தமும் சரியே.
வசனம் ஆனால் என்ன சொல்கிறது?
இந்த காலத்தில் நாம் வைத்திருப்பது போல கோர்வையான வேத புத்தகம் அப்பொழுது கிடையாது. பழைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட பாடல்களை சூழ்நிலையும் காலங்களும் மாறியதால் புதிய பாடல் எழுதிப் பாடி வலியுறுத்தப்பட்டது.
மேலும் தாவீது, சாலமோன், மோசே, கோராகு புத்தரரின் மூலம் எழுதப்பட்ட பாடல்கள் தொகுப்பு அவர்களிடம் இருந்தது. அவர்கள் இசைக்கருவியின் உதவியுடன் அதைப் பாடினார்கள்.
புதிய ஏற்பாட்டிலோ இசைக்கருவியின் துணையோடு பாடியதாக எங்கும் காணமுடியாது. கீழே கவனிக்கவும்:
1- மத் 26:30 / மாற்கு 14:26 – பாடினார்கள்
2- அப் 16:25 - பாடினார்கள்
3- ரோ 15:9 – உமது நாமத்தை சொல்லி சங்கீதம் பாடுவேன்
4- 1கொரி 14:15 – கருத்தோடும் பாடுவேன்
5- எபே 5:19 – கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணி
6- கொலோ 3:16 – கர்த்தரை பக்தியுடன் பாடி
7- எபி 2:12 – சபை நடுவில் உம்மை துதித்து பாடுவேன்
8- யாக் 5:13 – மகிழ்ச்சியாயிருந்தார் சங்கீதம் பாடகடவன்
புதிய ஏற்பாட்டு சபை எங்கும் இசைகருவியை உபயோகப்படுத்தியதாக காணமுடியவில்லை.
நாம் மோசேக்கு அல்ல கிறிஸ்துவுக்கு கீழ்படிந்தவர்கள்.
எந்த ஒரு இடத்திலேயும் எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் புதிய ஏற்பாட்டில் சீஷர்கள் / அப்போஸ்தலர்கள் / ஆதி கிறிஸ்தவர்கள் பாடல் சம்பந்தபட்ட எந்த வசனத்திலும் – வாயினால் பாடினார்களேயன்றி, கைகளை தட்டியோ, தம்புரு வாசித்தோ, ஜால்ராவை அடித்துக்கொண்டோ, வேறு எந்தவிதமான அந்த காலத்தில் இருந்த உபயோகப்படுத்தப்பட்ட இசை கருவிகளை மீட்டியோ பாடவில்லை.
ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். எபி 13:15
இசைகருவியை உபயோகபடுத்தினால் என்ன பிரச்சனை என்று கேட்டால் – தேவனுடைய எந்த செய்கையையும் எப்படி செய்யவேண்டும் என்று திட்டமும் தெளிவுமாக அவர் கொடுத்ததை நாம் மாற்ற எந்த அதிகாரமும் இல்லை.
நெருப்பு தானே தேவை – அது எங்கிருந்து வந்தால் என்ன என்று நினைத்தால் தன் உயிரையே இழந்தார்கள் நாதாபும் அபியுவும் (எண் 3:4)
முதல் முறை மலையை தடியால் அடிக்க சொன்னார் – அடுத்த முறை மலையை பார்த்து பேச வேண்டும் என்று தேவன் சொல்லியிருந்தும் பழக்க தோஷத்தில் ஜனங்கள் மீது இருந்த கோபத்தில் மோசே மலையை அடித்து விட்டார். தண்ணீர் வந்தது உண்மை தான் !! ஆனால் அவரோ வாக்குத்தத்தை இழந்து போனார் (1-யாத் 17:6, 2-எண் 20:8-13)
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். சங் 2:11
தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். சங் 89:7
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. எபி 12:28-29
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். சங் 119:120
பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? எபி 12:25
வசனத்தை கவனிக்கவும்: -> சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு,
உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி... என்றுள்ளது.
இதில் திணறுவதற்ககோ பதறுவதற்கோ எந்த இடமும் இல்லை.
உங்களுக்கு இசைக்கருவி உபயோகப்படுத்த வேண்டும் என்று பிரியமிருந்தால் அதை யாரும் தடுக்கலாகாது. ஆனால் அது தேவனுடைய அங்கீகரிப்பில் உள்ளதா என்பது தான் அவசியம்.
அவர் வசனம் தான் நம்மை நியாயந்தீர்க்கும் என்பதால் - அந்த சட்டம் நமக்கு இடம் கொடுக்கிறதா என்பதை கவனிக்கவும்.
போலீஸில் அகப்படும் வரை எதையும் செய்யலாம்.
பிடிக்கப்படும் போதோ - நம் வரலாறு நமக்கு கைக்கொடுக்காது . சட்டம் தான் அங்கு பேசும் !!
எடி ஜோயல் சில்ஸ்பி
-----*-