புதன், 22 ஏப்ரல், 2020

#891 - எபி. 4:12ல் தேவனுடைய வார்த்தையானது - விளக்கவும் ..

#891 - *ஜீவன், ஆவி, ஆத்துமா, நினைவு, யோசனை ஆவியின்படி நடந்நு கொள்ளுங்கள் என்பது தேவனுடைய வார்த்தையாய் இருக்க* எபி. 4:12ல் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது என்பதன் வித்தியாசத்தை விளக்கவும் ..

*பதில்*
தேவனுடைய வார்த்தையானது – எப்படி கிரியை செய்கிறது என்பதை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.

ஜீவனுள்ளதாகையால் – விழுந்த இடத்தில் தளிர்க்க ஆரம்பிக்கும்.
அதை வளர விடுவதும் நாசமாக்குவதும் விழுந்த இடத்தின் தன்மையை பொறுத்தது – மத். 13:5-8

வல்லமையுள்ளதாகையால் – இருதயத்தின் அழுக்கும், கொடிய துர்க்குணமும், நீக்கி ஆத்துமாவை இரட்சிக்கும்படியாக நம்மை தூண்டுகிறது – யாக். 1:21

 இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும் உள்ளதாகையால் – கடவுளே இல்லை என்று வாதாடுபவர்களும் மறுக்கமுடியாத அளவிற்கு ஊடுறுவி செல்லும். அனைத்து தடைகளையும் இலகுவாக சுலபமாக அறுத்து செல்லும். எப்பக்கத்திலுமிருந்து எது வந்தாலும் அது வெட்டப்பட்டு போகும். ஆத்துமாவையும் ஆவியையும் வேறுபிரித்து காட்டக்கூடிய தன்மை வசனத்திற்கு உண்டு. எலும்புகளைப்போல திடமுள்ளதாக இருந்தாலும் தசைகளைப்போல இலகுவானதாக இருந்தாலும் வகையறுக்கக்கூடியது. அதாவது கடினமானவனோ சாதாரணமானவனே – எவராக இருந்தாலும் தேவனுக்கு முன் ஒன்றுமில்லை !! நீதி. 5:4, ஏசா. 11:4.

இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறதாகையால் – இருதயத்தில் ஒன்றை நினைத்து முகத்தில் வேறொன்றை வெளிப்படுத்தும் திறமைசாலிகளையும் வேத வசனம் உள்ளிருந்து கொண்டு அவன் செய்வது தவறு என்று உணர்த்தும் வல்லமையுள்ளது. சங். 139:2, எரே. 17:10, வெளி. 2:23

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக