#890 - *உப்பு எப்படி தன் சாரத்தை இழக்கும்?*
*பதில்*
யோசிக்க வேண்டிய கேள்வி.
விஞ்ஞான ரீதியில் சோடியம் க்ளோரைட் (NACL) சேர்வையானது ஒரு போதும் அந்த தன்மையை இழக்க வாய்ப்பில்லை
இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளை கூறியிருந்த நாட்களில் உள்ள உப்பு - இன்று நம்மிடம் உள்ள உப்பு போல சுத்திகரிக்கப்பட்டதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
சவக்கடலில் உள்ள பாறைகளிலிருந்து வழக்கமாக உப்பு தயாரிக்கப்படுகிறது. இன்றும் அந்த உப்புகளுக்கு (Minerals) உலகளாவிய வியாபாரம் உண்டு.
சுத்தப்படுத்தும்படியாக தண்ணீரில் கரைத்து மீதம் உள்ள வெள்ளை நிற பொடிகற்கள் உப்பு போல காணப்பட்டாலும் அவைகளை உபயோகப்படுத்த முடியாது.
அவைகளை தோட்டத்திலோ அல்லது வயலிலோ உபயோகப்படுத்தவும் முடியாது. அதில் மீதமுள்ள உப்பு அங்குள்ள மண்ணை அழித்துவிடும்.
அதை அப்புறப்படுத்துவதற்கான சிறந்த இடம் தெருவில் கொட்டுவது தான். அதை தான் 35ம் வசனத்தில் பார்க்கிறோம்.
லூக்கா 14:34 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
லூக்கா 14:35 அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
உப்பினால்
உணவு பதப்படுத்தப்படுகிறது,
உணவு பாதுகாக்கப்படுகிறது,
கிருமிகளை அழிக்க உதவுகிறது,
உணவு ருசியுள்ள பதார்த்தமாக்குகிறது,
நீண்ட நாள் பாதுகாக்கிறது….
கிறிஸ்தவர்கள் உப்புக்கு சமானம் – மத். 5:13
உலகத்தாரோடு கிறிஸ்தவர்கள் கலக்கும் போது –
அவர்களில் நாம் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
தீமையான எண்ணங்களை அகற்ற பிரயோஜனப்படவேண்டும்.
திறம்பட தேவனுக்கென்று அவர்களை உருவாக்க வேண்டும்.
தவறான செயல்பாடுகளை அவர்களிலிருந்து அகற்ற முற்படவேண்டும்.
கிறிஸ்தவர்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு – அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் சேர்ந்தவர்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாமல் இருந்தால் – சாரமற்றவர்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது !!
கூட்டத்தோடு கூட்டமாக ஊர் சுற்றிவரலாம் – ஆனால் கடைசியில் தூற்றுக்கூடையில் தெரிந்து விடும். லூக்கா 3:17
நம்முடைய எந்த செய்கையும் கடைசியில் நிலைநிற்கும்படி பார்த்துக்கொள்வோம் – 1கொரி. 3:13-14
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக