புதன், 22 ஏப்ரல், 2020

#889 - வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது என்ற கலா 3:22ஐ எப்படி புரிந்து கொள்வது?

#889 *வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது என்ற கலா. 3:22ஐ எப்படி புரிந்து கொள்வது?*

அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

*பதில்*
நியாயபிரமாணமே நீதி என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள் யூதர்கள் – கலா. 3:21. 

இன்றும் யூதர்களின் நினைவு அதுவே !! அவர்கள் இன்னமும் இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்வதில்லை.

ஒரு இரட்சகர் இனியும் வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லூக்கா 19:41-42, அப் 13:46, யோ. 1:11, லூக்கா 19:14

நீதியானது (விசுவாசப்பிரமாணம்) கிறிஸ்துவை விசுவாசிக்கும் உலகத்தின் அனைத்து ஜனத்திற்கும் கொடுக்கப்பட்டது – கலா. 3:8, 11,14

அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? “வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும்” அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டது. அதாவது அவை மனிதர் செய்யும் தீமைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டின. மோசேயை மத்தியஸ்தராகப் பயன்படுத்தி சட்டங்கள் மனிதர்களுக்கு (இஸ்ரவேலருக்கு) வழங்கினர். கலா. 3:19

அப்படியானால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? இதனால் சட்டம் தேவனுடைய வாக்குறுதிக்கு எதிரானவை என்று பொருள் கொள்ள முடியுமா? முடியாது. மனிதர்களுக்கு (இஸ்ரவேலருக்கு) ஜீவனைக் கொடுக்கக் கூடிய ஒரு சட்டம் இருந்தால் அதனைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலமே தேவனுக்கு வேண்டியவராக முடியும். கலா. 3:21

அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.  கலா. 3:22

உலகமனைத்தும் பாவத்தின் கீழ் இருக்கிறது – ரோ. 3:23.

எல்லார் மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக தேவன் எல்லாரையும் கீழ்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார் – ரோ. 11:32

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் – பாவத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விசுவாசிக்கும்படி இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாசமே கொடுக்கப்படுகிறது (நியாயபிரமான அல்ல).

(KJV)  But the scripture hath concluded all under sin, that the promise by faith of Jesus Christ might be given to them that believe.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக