செவ்வாய், 21 ஏப்ரல், 2020

#888 - கடவுள் இல்லை என்பவரிடத்தில் என்ன சொல்வது?

#888 - *கடவுள் இல்லை என்பவரிடத்தில் என்ன சொல்வது?*

*பதில்*
அனைத்துமே தானாக வளர்ந்து விட்டது என்று நினைப்பவர்கள் அவர்கள்.

பல ஆயிரம் வருடங்களில் பாறைகள் மோதி, நெருப்பினால் உயிரணு உருவாகி அதிலிருந்து உயிரனங்கள் வளர்ந்து கடைசியில் மனிதனாக உருவெடுத்ததாக நம்புகிறவர்கள்.

குரங்கிலிருந்து மனிதன் வளர்ச்சியடைந்து விட்டதாக நம்புகிறவர்கள்.

கடவுள் இல்லை என்று “நம்புகிறவர்கள்”

சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் தானாக வானத்தில் சிதறி நமக்கு வெளிச்சத்தை தருகிறது என்கிறவர்கள்.

இப்படிப்பட்டவர்களிடத்தில் எடுத்த உடனேயே நம் பரிசுத்த வேதத்தை வைத்து துவங்கினால் – செவி சாய்க்க மாட்டார்கள். முதலாவது துளியாவது நம்பிக்கை இருந்தால் தானே – வேதத்தின் வசனங்களை கவனிக்க தோன்றும்.

*ஆகவே வழக்கமாக நான் கீழ்கண்ட கேள்விகளை அவர்களிடத்தில் கேட்பதுண்டு*:
கடுகை விதைத்தால் கூட இன்று வரை கடுகு செடி தான் வளருகிறது. ஒரு போதும் எந்த விதையும் தன் வகை விட்டு வேறு செடிக்கு மாறுவதில்லை. இந்த ஒழுங்கை யார் கொடுத்தது?

குறைந்தது ஏறத்தாழ 3,000 கி.முவிலிருந்தே துல்லிய விபரங்களை வரலாற்றுக்  குறிப்பேடுகளில் வரலாறாக உள்ளது. உலகத்தின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனடியாக அனைவரும் அறிந்து கொள்ளும் தொலை தொடர்பு வசதிகளும் உள்ளது. ஆனால், இன்று வரை எந்த பூனையும் நாயாகவோ”, “அட்டை பூச்சி பாம்பாகவோ அல்லது குறைந்த பட்சம் சுன்டெலி பெருச்சாலியானதாகவோநாம் காணவில்லை !!

ஒரு  நாள் கூட சூரியன் தன் ஓடுதள பாதையை விட்டு வேறு திசையில் போய் பார்க்கவில்லை !!

சதா ஓடிக்கொண்டேயிருக்கும் சிறிய கைக்கடிகாரம் தானாக வளர்ந்தது என்று சொன்னால் அவர் நம்புவாரா?

ஒருவர் இறந்ததும் அவர் ஆவி எங்கே போகிறது என்று அவர் சொல்ல முடியுமா?

செயற்கையாக குழந்தை பிறப்பதை, இக்கால விஞ்ஞான வளர்ச்சியினால் இவர்கள் முயற்சி செய்யும் ஆண் + பெண்ணின் முட்டையை சேர்த்து தாயின் வயிற்றின் கர்ப்பப்பையில் வைக்காமல், தனியே வெளியே வைத்து ஒரு குழந்தையை உருவாக்கிவிட முடியுமா?

ஒரு சரீரத்திலிருந்து வெளியேறிய உயிரை விஞ்ஞானத்தாலும் மருத்துவத்தாலும் இவர்களால் திரும்பக்கொண்டு வர முடியுமா? அல்லது போகும் உயிரை தடுத்து நிறுத்த தான் முடியுமா?

காற்று போகும் திசையை தன் வசப்படுத்த முடியுமா?

இப்படி ஏராளம் கேள்விகள் உண்டு. இந்த கேள்வி அனைத்திற்கும் பதிலை வேதத்தில் காண முடியும் !!

தன்னால் அனைத்தையும் செய்து முடிக்கலாம் என்று நினைப்பவர் புத்தியீனன் என்று வேதம் சொல்கிறது.

அவர்கள் தங்களை கெடுத்துக்கொள்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது.

அது அருவருப்பு என்கிறார் ஜீவனுள்ள தேவன் - சங். 14:1

அவர்கள் கர்வம் உள்ளவர்கள் – சங். 10:4

தேவன் அவர்களை கேடான சிந்தனைக்கு ஒப்புக்கொடுக்கிறார் – ரோ. 1:28

அவர்கள் மதியீனர் – சங். 53:1

நான் மேலே கேட்ட கேள்விக்கான ஆதார மூல வசனங்கள் மற்றும் விஞ்ஞானத்தால் தீர்க்க முடியாத தேவனுடைய மகத்துவங்களை குறிக்கும் வசனங்களை கீழே பதிவிடுகிறேன்:

“தாவீது எழுதிய ஒரே ஒரு பாடலே போதுமானது“

சங். 104:2 ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

சங். 104:3 தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.

சங். 104:4 தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார்.

சங். 104:5 பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.

சங். 104:6 அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.

சங். 104:7 அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.

சங். 104:8 அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.

சங். 104:9 அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.

சங். 104:14 பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.

சங். 104:15 மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.

சங். 104:16 கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.

சங். 104:17 அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.

சங். 104:18 உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.

சங்.  104:19 சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.

சங். 104:20 நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.

சங். 104:21 பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித்தேடும்.

சங். 104:22 சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.

சங். 104:23 அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.

சங். 104:24 கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.

சங். 104:25 பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.

சங். 104:26 அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.

சங். 104:27 ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.

சங். 104:28 நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.

சங். 104:29 நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.

சங். 104:30 நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.

சங். 104:35 பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா. 

பிர. 11:5 ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.

யோ. 3:8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது;

யோபு 26:4 யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?

யோபு 26:5 ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.

யோபு 26:6 அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.

யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.

யோபு 26:8 அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.

யோபு 26:9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.

யோபு 26:10 அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.

யோபு 26:11 அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.

யோபு 26:12 அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.

யோபு 26:13 தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.

யோபு 26:14 இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான். 

ரோ; 11:33 ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

இந்த மகத்துவங்களை அறியத்தக்கவன் யார்??

கடவுள் இல்லை என்று சொல்கிறவன் “முட்டாள்”

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக