செவ்வாய், 21 ஏப்ரல், 2020

#886 - யோபு எந்த காலத்தில் வாழ்ந்தார்?

#886 - *யோபு எந்த காலத்தில் வாழ்ந்தார்?*

*பதில்*
யோபு பூமியில் வாழ்ந்த காலத்தை குறிப்பாக வேதத்தில் காணமுடியாது.

ஆதியாகமம் 5 மற்றும் 11ல் காணப்பட்ட காலவரிசை தகவல்களுடன் ஒப்பிட்டாலும் குறிப்பாக யோபுவின் காலத்தை கணிக்க முடிவதில்லை.

ஆயினும், யோபுவின் புத்தகத்தில் உள்ள பல்வேறு தடயங்களின் மூலம், நோவா காலத்தின் வெள்ளத்திற்குப் பிறகு வாழ்ந்ததை கணிக்கமுடியும்.

*முதலாவதாக*,

எலிப்பாஸின் இறுதி பேச்சில் தெளிவாகத் தெரிகிறது.
"அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ” ? - யோபு 22:15.

வேத வல்லுநர் வெய்ன் ஜாக்சன் “இது நோவாவின் நாளின் வெள்ளத்தைப் பற்றிய குறிப்பு என்பது உலகளவில் அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது என்கிறார்” (1983, பக். 58).

*இரண்டாவதாக*,

யோபு - ஆபிரகாமின் காலத்திலேயோ அல்லது கொஞ்சம் பிற்காலங்களிலோ வேறொரு பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்று பின்வரும் குறிப்புகளால் கவனிக்க முடிகிறது.

யோபுவின் தகனபலிகளின் பழக்கம் ஆரம்பகாலத்தை போல இருந்தது. - யோபு 1:5; 42:8, ஆதி. 8:20; 12:7-8; 31:54

மேலும் யோபுவின் புஸ்தகத்தில், லேவிய ஆசாரியத்துவம், ஆசரிப்பு கூடாரம், தேவாலயம், மோசேயின் சட்டம் போன்றவை எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே மோசேயின் காலத்திற்கு முந்தைய காலம் என்பதை யூகிக்க முடியும்.

யோபு தன் மகள்களுக்கும் சம்பத்தை பகிர்ந்து கொடுத்ததன் அடிப்படையிலும் – நியாயபிரமாண காலத்திற்கு முந்தியவர் என்று கணிக்கலாம் - யோபு 42:15, எண். 27:1-11; 36:1-13

மேலும் யோபுவின் செல்வ செழிப்பு அளவிடப்பட்ட முறையானது  பணத்தை அடிப்படையாக இல்லாமல் கால்நடைகளின் மதிப்பீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. யோபு 1:3; 42:12. ஆபிரகாமின் செல்வமும் இது போலவே கணக்கிடப்பட்டதை அறியவும் – ஆதி. 12:16, 13:2, 24:35, 26:13-14

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக