சனி, 4 ஏப்ரல், 2020

#851 - Isa 63:1 இந்த வசனம் யெஷுஆ கிறிஸ்து என்கிறார்களே இது உண்மையா?

#851 - *இந்த வசனம் யெஷுஆ கிறிஸ்து என்கிறார்களே இது உண்மையா?* ஏசா. 63:1 ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

*பதில்*
இரட்சிக்க வல்லவராகிய நான் தானே என்பது நிச்சயம் தேவனையே குறிக்கிறது.

ஆனால் பிதாவானவரையா அல்லது வார்த்தையானவராகிய கிறிஸ்துவை குறிக்கிறதா என்றால் அதற்கான எந்த குறிப்பும் ஊர்ஜீதமாக சொல்வதற்கு இந்த பகுதிக்கான வேத ஆதாரம் காணப்படவில்லை.

எப்படியாயினும் *பிதாவினுடைய சித்ததின்படியே திட்டத்தின்படியே குமாரன் சகலவற்றையும் நிறைவேற்றினார் என்பது வேதம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. பிதாவானவரும் ஜனங்களின் இரட்சிப்பை தன் குமாரன் மூலம் தன் சித்தத்தை / இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினார். கலா. 1:4, எபே. 1:6, யோ. 3:17, யோ. 8:16
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக