#809 - *ஜெபத்தில் உறுதியாய் தரித்திருங்கள் – ரோ. 12:12. விளக்கவும்*
*பதில்*
ஜெபத்தில் விடாமுயற்சியுடன் இருங்கள் - கொலோ. 4:2; லூக்கா 18:1.
கிறிஸ்தவ வாழ்க்கையின் கடமைகளை சரியாக நிறைவேற்றுவதற்கும், குறிப்பாக ஒரு மகிழ்ச்சியான நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், துன்பங்களுக்கு மத்தியில் நிலைத்திருப்பதற்கும், ஜெபத்தின் ஒரு மனநிலையைப் போற்ற வேண்டியது அவசியம். தேவனுக்கு அருகில் ஜீவிப்பது அவசியமாகிறது.
தாவீது ஒரு நாளைக்கு ஏழு முறை ஜெபம் செய்தார் என்று சொல்லப்படுகிறது - சங். 119:164;
தானியேல் ஒரு நாளைக்கு மூன்று முறை ஜெபம் செய்ய அவர் பழக்கப்பட்டவர் – தானி. 6:10;
புதிய ஏற்பாட்டிலோ – “எப்பொதும்“ ஜெபத்தில் விழித்திருங்கள் என்றார் – கொலோ. 4:2
இஸ்ரவேலர் யுத்தத்தில் ஈடுபட்ட வேளையில் அவர்கள் ஜெயம் ஜெபத்தினால் கிடைத்தது – யாத். 17:11-12.
சத்துருக்கள் நம்மை அண்டாமல் இருக்க ஜெபம் அவசியப்படுகிறது. சங். 56:9
நம்மை சுற்றி வளைத்த சத்துருவை வெல்ல – ஜெபம் அவசியப்படுகிறது - சங். 118:11
எப்படி தீர்வு காண்பது என்று குழம்பும் நேரத்தில் ஜெபத்தினால் வழி பிறக்கிறது – எரே. 33:3
நாம் ஜெபிக்கும் போதெல்லாம் அவர் நம்மில் இருக்கிறதை உணர்கிறோம் – உபா. 4:7
எந்த சூழ்நிலையிலும் அவரை நாம் கூப்பிடவேண்டும் – பிலி. 4:6
நாம் விரும்பியதும் கேட்டதும் ஜெபித்ததும் கிடைக்கவில்லை என்று சோர்ந்து போகாமல் ஜெபிக்கவேண்டும் – லூக்கா 18:1
நம் மீது தேவன் கோபப்பட்டிருந்தாலும் ஜெபிக்க வேண்டும் – ஏசா. 26:16
துக்கமாயிருந்தால் ஜெபிக்க வேண்டும் – யாக். 5:13
எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்ட நிலையில் நாம் ஜாக்கிரதையாக தொடர்து ஜெபிக்க வேண்டும் – 1பேதுரு 4:7
இப்படி எல்லா சூழ்நிலையும் நம் அநுதின வாழ்வில் சந்திந்தித்துக்கொண்டிருக்கும் போது; யாரோ ஒருவர் தொலைபேசியிலும் வாட்சப்பிலும் நமக்கு நேரம் குறிக்க; விழுந்து விழுந்து ஜெபிக்கும்படி முற்படாமல் எப்போதும் தேவனோடு உள்ள உறவை ஜெபத்தில் வைத்திருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
*புதிய இறக்குமதியாக தற்போது* :
பிரத்யேக ஜெப வாட்ஸப் குழுக்கள்,
ஜெப அரங்கங்கள்,
ஜெப மாளிகைகள்,
24x7 மணி நேர ஜெப வீரர்கள்,
24x7 மணி நேர ஜெப வீராங்கணைகள் என்று தங்கள் பெயர் பலகைகளையும், விளம்பரங்களையும் வைத்துக்கொண்டு *வீட்டிலிருக்கும் பெண்களை* குறிபார்த்து ஜெபம் என்ற பெயரில் இணைத்தும், அழைத்தும் தங்கள் குழுக்களில் தக்க வைத்துக்கொள்ளும் வாட்ஸப் ஊழியர்களும் ஊழியங்களும் பெருகிவிட்டது.
*வேதம் இதைகுறித்து என்ன சொல்கிறது*?
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்கவேண்டாம்; “*மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்*”; அவர்கள் *தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று* மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். மத். 6:5-6
மறைவான ஜெபமே ஜெபத்தின் வெற்றி !! அதுவே ”கதவைப்பூட்டி ஜெபிப்பது”.
ஜெபத்தின் வெற்றியின் இரகசியம் – இரகசியமாக ஜெபிப்பதே !!
நான் ஜெபிக்க துவங்குகிறேன் என்று ஒருவர் தன் குழுவில் தெரிவித்து, ஜெபத்தை முடித்ததும் முடித்துவிட்டேன் என்றும் தெரிவிக்கிறார். உடனே மற்றவர் துவங்கவேண்டும் என்ற கட்டளையோடு பல ஜெப வாட்ஸப் குழுக்கள் இயங்குவதை காணமுடிந்ததது. ஜெபத்தை இவ்வாறு க்யூவில் நிறுத்தி விட்டார்கள் !!
கூடி ஜெபிப்பதன் நோக்கத்தை விளம்பரப்படுத்தி ஜெபிப்பதாக மாற்றிவிடக்கூடாது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக