புதன், 4 மார்ச், 2020

#784 - ஆரோனைப்போல தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் என்று என் பாஸ்டர் சொல்லுகிறார். விளக்கமுடியமா ஐயா?

#784 - *ஆரோனைப்போல தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் என்று என் பாஸ்டர் சொல்லுகிறார். விளக்கமுடியமா ஐயா?*

*பதில்*
நீங்கள் குறிப்பிடும் இந்த பகுதி எபிரேயர் 5ம் அதிகாரம் 4ம் வசனத்தில்  வருகிறது.

எபி. 5:4 – “மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை”.

உங்கள் பாஸ்டர் மாத்திரம் அல்ல – நாட்டில் பலபேர் இந்த வசனத்தை குறிப்பிட்டு தங்களது அங்கீகாரத்தை *தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்*.

வேதாகமத்தை படிக்கும் போது மேலும் கீழும் உள்ள வசனத்தை படித்து வசனத்தின் சாராம்சத்தை அறிய வேண்டியது அவசியம்.

இந்த வசனம் ஆசாரியர்களையோ குறித்தோ ஊழியர்களைகுறித்தோ அல்ல  - தேவன் தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை *பிரதான ஆசாரியராக நியமிக்கிறதை* குறிக்கிறது !!!!

நியாயபிரமாண காலத்தை போல இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில் யாரையும் தேவன் பிரதான ஆசாரியராக நியமிக்காமல் - தன் குமாரனாகிய *இயேசு கிறிஸ்துவையே பிரதான ஆசாரியராக* நியமித்திருக்கிறார்.

இந்த வசனங்களை வாசிக்கவும் : எபிரேயர் 2:17, எபிரேயர் 3:1, எபிரேயர் 4:14, எபிரேயர் 4:15, எபிரேயர் 5:5, எபிரேயர் 6:20, எபிரேயர் 7:26-27.

“ஆரோனைப் போல தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டாலொழிய” என்ற இந்த வசனம் - பிரதான ஆசாரியரான *இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லப்பட்டது*.  எந்த மனிதருக்கும் இது பொருந்தாது !!!!

1ம் வசனம் துவங்கி 5 வசனங்களை கீழே தொடர்ந்து படித்துப்பார்க்கவும். அப்போது தெளிவாக புரியும் – இந்த வசனம் யாரைக்குறித்து சொல்லியிருக்கிறது என்று. அதை கீழே கொடுத்திருக்கிறேன் வாசித்துபார்க்கவும்.

எபி. 5:1 அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.

எபி. 5:2 தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.

எபி. 5:3 அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது.

எபி. 5:4 மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.

எபி. 5:5 *அந்தப்படியே கிறிஸ்துவும்* பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.

ஆம்.... இந்த வசனம் *மனிதர்களாகிய எந்த ஊழியக்காரருக்குமே பொருந்தாது* என்பது தான் நிதர்சனமான உண்மை !!

இரட்சிக்கப்பட்ட அனைவரும் தேவனுடைய ஆசாரியர்கள். 1பேதுரு 2:9

தேவனுக்கு ஊழியம் செய்வது ஒவ்வொருவரின் கடமை.

சிலர் வேலையை விட்டு முழுநேரம் செய்கிறார்கள்.
சிலர் வேலையோடு கூட ஊழியம் செய்கிறார்கள்.
அவரவர் பிரயாசத்தின் அவசியத்தை பொருத்து தீர்மானிக்கிறார்கள்.

முழு நேர ஊழியம் தான் செய்ய வேண்டும் என்று வேதாகமத்தில் இல்லை. ஆனால் அதற்கு மாறாக – ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்று உள்ளது !!! 2தெச. 3:6-12

வேதத்தை அறியாமல் “தன்னை தனியாக ஆண்டவர் அழைத்தார்” என்று இந்த வசனத்தை கோடிட்டு காண்பிப்பது – மற்றவர் முன்பாக தனக்கு தானே அங்கீகாரத்தை தேடிக்கொள்ளும் வேதத்திற்கு முரணானது/ தவறானது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக