இப்போது இருக்கும் பெந்தேகொஸ்தே சபையின் உபதேசமா..... பேதுருவின்
தனிப்பட்ட கருத்தா.... இல்லை கிறிஸ்துவின்
உபதேசமா.....
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த
வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு
அலங்காரமாயிராமல், 1 பேதுரு 3:3
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய
இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே
தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. 1 பேதுரு 3:4
தயவுசெய்து விளக்கவும்
*பதில்*
2 தீமோ.
3:16 இதற்கான தெளிவான பதிலை தருகிறது. வேதாகமத்தின் வசனங்களை பரிசுத்த ஆவியானவர்
நம் படிப்பிதலுக்காக எழுதி வைத்திருக்கிறார்.
பெந்தேகோஸ்தே
சபையினரின் உபதேசமா என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை !!
ஏனென்றால்
பெந்தேகோஸ்தே சபையானது 1899ல் வேறூன்ற ஆரம்பித்து இப்போது வேலியை மூடி படர்ந்து பரவியிருக்கிறது.
பேதுருவின்
இந்த முதலாம் நிருபம் சுமார் 65வது கி.பி.யில் தேவனுடைய பரிசுத்த ஆவியானவரால்
எழுதப்பட்டவை.
நாம்
கிறிஸ்துவின் போதனைக்கு முழுமையாக கீழ்படியவேண்டும்.
கிறிஸ்துவானவர்
அப்போஸ்தலருக்கு கட்டளையிட்ட யாவையும் நாம் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டு போதித்ததின்படி
அப்போஸ்தலரின் வழிநடத்துதலைக் நாம் கடைபிடிக்கிறோம். மத். 28:18, அப். 1:3,
2:42, 20:20-21, 27, 1கொரி. 11:2,
14:37, 1தெச. 4:1-2
பெந்தேகோஸ்தே
அமைப்பினர் நீங்கள் கோடிட்டு காண்பித்த வசனத்தின் சில வார்த்தைகளை மாத்திரம் பற்றிக்கொண்டு
தங்கள் கோட்பாடுகளை வலியுறுத்துவது சரியான முறையல்ல...
ஆபரணங்களை
அணியக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்துவார்களானால், அந்த வார்த்தைக்கு முந்தைய
வார்த்தையையும் பிந்தைய வார்த்தையையும் கவனித்து செயல்படுத்த முடியாமல் போகிறதென்ன?
மனுஷனுடைய
போதனைகளை தேவ வசனத்தோடு ஒப்பிட்டு பார்த்து வசனத்திற்கு முழுமையாய் கீழ்படிவது நம்
இரட்சிப்பை பாதுகாத்துக்கொள்ள ஏதுவாகும் – கொலோ. 2:19, 2யோ. 1:8
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக