சனி, 22 பிப்ரவரி, 2020

#769 - எப்படிபட்ட சாட்சியை நம்பலாம்? தான் நரகத்திற்கு போய் வந்ததாக ஒரு ஊழியர் சொல்கிறாரே. அதை நாங்கள் நம்பலாமா?

#769 - *எப்படிபட்ட சாட்சியை நம்பலாம்? தான் நரகத்திற்கு போய் வந்ததாக ஒரு ஊழியர் சொல்கிறாரே. அதை நாங்கள் நம்பலாமா?*

*பதில்*
சாட்சி என்றால் சொந்த கண்களினால் “கண்டது”.

அதாவது – *மற்றவர்களுக்கு நடந்தவற்றை நாம் சொந்தக் கண்களால் கண்டதை* மற்றவரிடம் சொல்வது சாட்சியம்.

நீதிமன்றத்தில் நீங்கள் சாட்சி சொல்வதற்கு அழைக்கப்பட்டால், குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருப்பவர் மீது சாட்டப்பட்டிருக்கும் தகவல் உண்மையா பொய்யா என்று நீங்கள் *அவரை பற்றி* கூற வேண்டும்.

உங்களுக்கு நடந்தவற்றை நீங்களே கூறினால் உங்களைபற்றிய சொந்த சாட்சி *நீதிமன்றம் ஏற்காது* !!

உங்களை குறித்து *மற்றவர் சொல்வது சாட்சி* !!
உங்களை குறித்து *நீங்களே சொல்வது வாக்குமூலம்* !!

இந்த புரிதல் முதலாவது நமக்கு இருந்தாலே இந்த காலத்தில் சாட்சி என்று சொல்லிக்கொண்டு  சபை முன்னதாக நின்று நாளை நான் ஊருக்கு போகிறேன், முதல் நாள் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லும் கூற்றுகளை நீங்களே அது எவ்வளவு அறிவீனம் என்பதை புரிந்து கொள்ளலாம். சாட்சிக்கும் ஜெபவிண்ணப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் போனதன் விளைவு இது.

இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களை பார்த்து எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.  ஏனென்றால் அவர்கள் இயேசு கிறிஸ்துவோடு கூடவே இருந்ததை,
மற்றவர்களுக்கு,
தாங்கள் நேரடியாக கண்ட இயேசு கிறிஸ்துவை குறித்து *சாட்சி சொன்னார்கள்*. லூக்கா 24:48.

யோ. 15:27 - நீங்களும் *ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால்* எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

யோ. 21:24 அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

அப். 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், *எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்* என்றார்.

அப். 1:21-22 ஆதலால், யோவான் ஞானஸ்நானம்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர *எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும், அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில்* ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் *சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும்* என்றான்.

அப். 3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; *அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்*.

அப். 4:20 நாங்கள் *கண்டவைகளையும் கேட்டவைகளையும்* பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.

அப். 4:33 கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் *சாட்சிகொடுத்தார்கள்*; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.

அப். 13:31 தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் *சாட்சிகளாயிருக்கிறார்கள்*.

1யோ. 1:1 ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், *எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற* ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

*இந்த ஊழியர் நரகத்திற்கு போய் எப்படி திரும்பி வர முடியும்*?
வேதாகமத்திற்கு முரணான வார்த்தை இது.

லூக்கா 16:26 ... இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே *பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது* என்றான்.

லூக்கா 16:31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

*எவரும் நரகம் போய் திரும்ப பூமிக்கு வரஇயலாது*.
நீங்கள் சொல்லும் ஊழியர் மனந்திரும்பாமல் வேதத்திற்கு செவிசாய்க்காமல் இப்படியே இருந்தாரென்றால் அவரது மன விருப்பம் நிறைவேறலாம். தேவன் தனது வருகையைத் தாமதப்படுத்துவது இவருக்காகவுமே...சீக்கிரம் உண்மைக்குத் திரும்புவார் என்று நம்புகிறேன். 2பேதுரு 3:9

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக