#767 - *லெந்து நாட்களை கடைபிடிக்கிறார்களே – விளக்கவும்*
*பதில்*
தினமும் ஆசீர்வாதத்தை காலையில் படித்து ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்று வாழ்க்கையை துவங்கி *சொந்த வழியில்* போய்க்கொண்டிருந்தது போக – வேதத்தை ஒப்பிட்டு லெந்து நாட்களை அனுசரிப்பதை குறித்து படித்தால் பலருக்கு முகம் சுளியும்.
கத்தோலிக்கர் செய்து வந்த முறைமைகளை மற்ற கிறிஸ்தவ மதத்தினரும் லெந்து நாட்களை கடைபிடிக்க துவங்கியதை பார்க்கும் போது இனி வரும் காலங்களில் அவர்களை போல இவர்களும் மரியாளுக்கு ஒரு இடத்தை ஆராதனையில் ஒதுக்கவும் ஆரம்பிப்பார்கள் என்றே தோன்றுகிறது.
*லெந்தை குறித்து வேதம் என்ன சொல்கிறது*?
எதையும் வேதத்தில் காணமுடியாது. ஆங்கில வேதாகமத்தில் ஒரே ஒரு இடத்தில் Lent என்ற வார்த்தை வருகிறது 1சாமு. 2:20ல். ஆனால் அதன் அர்த்தமோ வேறு !!
*கிறிஸ்தவர்கள் லெந்த் நாட்களை கடைபிடிக்கலாமா*?
கிறிஸ்துவை குறித்தும் அவர் பாடுகளை குறித்தும் எல்லா வாரத்தின் முதல் நாளிலும் நினைவுகூற வேண்டும் என்று சொல்கிறதேயன்றி – வருஷத்திற்கு ஒரு முறை இப்படி உபவாசம் இருக்கவேண்டும் என்பது *மனிதர்களின் துர்போதனை*.
எந்த ஆகாரத்தையும் விலக்கி வைக்க வேண்டும் என்று போதிப்பது மனிதனின் போதனை என்று வேதம் சொல்கிறது.
தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் விவாகம் செய்யாதிருக்கவும் ஜனங்களுக்கு *பொய்யர் கட்டளையடுவார்கள்* என்று 1தீமோ. 4:2-3ல் சொல்லும் காலத்தை தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கலா. 1:7பி-8 … கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். (2யோ9) .... சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்
*இதை கடைபிடித்தால் என்ன தவறு*?
வாராவாரம் கடைபிடிக்க வேண்டிய கடமையை விட்டு வருஷத்திற்கு ஒரு முறை இப்படி செய்வது வேதத்திற்கு முரணானது.
(2தீமோ. 4:3-5) அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் (வந்திருக்கறது !!) நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு..
*மனுஷருடைய கற்பனைகளையும் பாரம்பரியங்களையும் கடைபிடித்து தேவனுடைய சமூகத்தில் வருவது பாவம்* என்று கிறிஸ்து சொல்கிறார் (மத். 15:8-9)
லெந்து நாட்களில் தங்களை சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் வைத்துக்கொள்ள் வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்ற நாட்களில் பாவ வாழ்க்கை வாழ வேதாகமம் இடம் கொடுக்கிறதோ? நாம் எல்லா நாளும் பரிசுத்தமாய் வாழ தேவ குமாரன் தன் ஜீவனை கொடுத்தாரே ! 1யோ. 3:4-8
1யோ. 3:7 ... நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். (வ18-20) ... வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
சிந்திப்போம், சீர்படுவோம் – தேவனுடைய பிள்ளைகளாய் தொடர்ந்து வாழ்வோம். தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
சத்தியதிற்கு மாத்திரம் செவிசாய்ப்போம்... தேவன் நம்மோடு இருப்பார் – அப்போது ஆசீர்வாதம் நம்மோடு தங்கியிருக்கும் !!
இப்போது கொஞ்சம் மனம் வருந்தினாலும் வேதத்தின் அடிபடையில் இப்போதே நம்மை திருத்திக்கொண்டால் நித்திய நரகத்திற்கு தப்பித்துக்கொள்ளலாம்.. சொற்ப நாள் சந்தோஷத்தை ஆதரித்து நித்திய வாழ்நாளை வீணாக்கிவிட வேண்டாம் !!
லெந்து நாட்கள் என்பது – வேதத்திற்க்கு முற்றிலும் முரணான கத்தோலிக்கர்களின் போதனை. கிறிஸ்துவின் போதனை அல்ல.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக