#765 - *கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு முன்பாக சாத்தானிடம் என்ன அதிகாரம் இருந்தது, இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்த பிறகு சாத்தானிடம் என்ன அதிகாரம் உள்ளது?*
*பதில்*
நாம் அறிய வேண்டிய மிக முக்கியமானவைகளில் ஒன்று, இயேசு கிறிஸ்து மூலமாகவும், அவருடைய சிலுவை மரணத்தின் மூலமாகவும் சாத்தான் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டான் என்பதை அறிவதாகும்.
சிலுவைக்கு முன்னரும் பின்னரும் – பிசாசு மனிதர்கள் தேவன் மீது வைத்திருக்கும் விசுவாசத்தை சோதிக்கும் ஒருவனாக செயல்படுகிறான்.
ஏவாளும் பின்னர் ஆதாமும் விழுந்தார்கள்.
இன்றும் கிறிஸ்தவம் என்கிற பெயரில் அநேகர் பொய்யான அற்புதங்களையும் எவருக்கும் புரியாத பாஷையை பேசுவதாலும் வேதத்தில் சொல்லாத முறைகளை பின்பற்றுவதாலும் தான் பரிசுத்தம் அடைந்ததாக நினைக்க வைத்து வேதத்தின் கட்டளையை மீற வைக்கிறான்.
*1) எபேசியர் 1: 17-23*
பிதாவானவர் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினதனால் *எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக*, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, *எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி* எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
*2) கொலோசெயர் 2:15*
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். இயேசு சாத்தானையும், துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் முற்றிலுமாக அகற்றி பிசாசை ஜெயித்தார்.
மத். 28:18 இயேசு கிறிஸ்துவிற்கு *வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது*.
இயேசு தன் சிலுவை மரணத்தின் மூலம் ஏற்கனவே அதைச் செய்துவிட்டார். ஆகவே, நாம் சாத்தானை தோற்கடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் - தேவன் கொடுத்த கட்டளையை / அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றியைச் செயல்படுத்துவதாகும்.
*3) சாத்தான் தோற்கடிக்கப்பட்ட எதிரி.*
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் தவறான போக்கை கடைபிடிக்கும் போது பிசாசின் ஆதீக்கத்தில் மனிதர்கள் தாமாக விழுகிறார்கள். நாம் பாவத்தில் விழும்படி நமக்கு கோபத்தையும், தவறான எண்ணத்தையும், விரோதத்தையும், தவறான சத்தியத்தையும், பொய்யான அற்புதங்களையும், பொய்களையும், விக்கிரகங்களையும் முன்வைப்பான்.
ஆனால் நாமோ தேவ வார்த்தைக்கு மாத்திரம் செவி சாய்த்து கட்டு கதைகளுக்கு விலகி பொய்யான அற்புதங்களையும் தூதர் பாஷை என்று யாருக்குமே புரியாததை நம்பி வீணாகாமல் தேவ வார்த்தையை விசுவாசித்து மனந்திரும்பி கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் பெற்று கீழ்படியும்போது தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள்.
போராட்டங்களும் வேதனைகளும் நம்முடைய கீழ்படியாமையினால் வருகிறது.
அப். 26:18 அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
வியாதியும் மரணமும் – சரீரத்தின் (பாவத்தின்) பலன்.
இரட்சிப்பின் மூலம் இப்போது நாம் சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஒளியின் ராஜ்யத்தில் தேவனுடைய வழிநடத்துதலால் (வனசத்தின் மூலம்) நடத்தப்படுகிறோம்.
ரோ. 13:12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை *நாம் தள்ளிவிட்டு*, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
1யோ. 2:8 மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
பாவத்தினால் மனிதன் சம்பாதித்த தேவனிடத்திலிருந்து உள்ள பிரிவினையை ஸ்திரீயின் வித்தாக இரட்சகர் வந்து சரிசெய்வார் என்று ஆதி தம்பதியினருக்கு சொல்லப்பட்டது. ஆதியாகமம் 3:16
ஏவாளிடத்தில் செய்த வஞ்சகத்தின் மூலம் மனித குலத்தை முழுவதுமாக தன் பக்கம் இழுத்து தள்ளலாம் என்ற பிசாசின் எண்ணம் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் தகர்க்கப்பட்டது - கொலோசெயர் 2: 13-15:
சிலுவையில், கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் இருளின் அதிகாரத்தையும் வென்றார்.
*சாத்தானின் வேலை*
எளிமையாகக் கூறவேண்டுமானால், மனித இனத்தை நரகத்தில் அழிப்பதாகும். வெளி. 9:11
கிறிஸ்துவின் சோதித்தலின் மூலமும் (மத். 4: 1-11), அவருடைய அப்போஸ்தலர்களை அழிக்க நினைத்ததன் மூலமும் மனிதகுலத்தை அழிக்க முயன்றான் (லூக். 22:31).
அந்தத் திட்டம் தோல்வியுற்ற போதிலும் (யூதாஸைத் தவிர யோ 17:12), இப்போது அவன் “கெர்ஜிக்கிற சிங்கமாக வலம் வந்துகொண்டிருக்கிறான்” (2 பேதுரு 5: 8).
*சாத்தான் இன்று எப்படி வேலை செய்கிறான்*?
முன்னாள் யுகங்களில் அமானுஷ்ய ரீதியாக மிகக் குறைந்த வழியில் செயல்பட சாத்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மத். 12: 22-29; யாத். 7:11, 22;
இருப்பினும், இன்று, சாத்தான் அற்புதமான பாணியில் செயல்பட முடியாது. 2தெச. 2: 9
புதிய ஏற்பாடு இதற்கு சான்றுகளை வழங்குகிறது.
*ஏமாற்றுபவன்*:
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (2 கொரி. 4: 4).
உண்மையான ஊழியக்காரனை போலவே பிசாசு செயல்படுவான் - 2 கொரி. 11:14,15.
சத்தியத்தை நம்ப வேண்டாம் என்று மக்கள் விரும்பும்போது, பிசாசு அவர்கள் இருதயங்களிலிருந்து தேவனுடைய நற்செய்தியை எடுத்துக்கொள்கிறான் (லூக். 8:12).
அவன் தந்திரம் நிறைந்தவன்.
அவன் தனது வலைகளில் விழ வைக்கிறான் (1 தீமோ. 3: 7)
அவனது “தந்திரங்களை” வேண்டுமென்றே திறம்பட நிறைவேற்ற முயற்சிப்பான் (எபே. 4:14; 6:11)
தேவ வசனத்தின் மூலம் பிசாசின் தந்திரங்களை நாம் அறிய முடியும் (2 கொரி. 2:11).
நாம் ஒருபோதும் சாத்தானின் சக்தியை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றாலும், நாம் அவனை ஒருபோதும் மிகைப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதை அறியவேண்டும்.
அவனுக்கு
துன்புறுத்தும் வல்லமை குறைவாக இருந்தது (யோபு 1:12; 2: 6).
தேவ தூதனால் கண்டிக்கப்பட்டபோது, அவன் அமைதியாக இருக்க வேண்டியிருந்தது (சகரியா 3: 2).
உலக ராஜ்யங்கள் மீதான அவனுடைய அதிகாரம் அவனுக்கு சொந்தமானதல்ல ஆனால் “வழங்கப்பட்டது” (லூக்கா 4: 6).
அவன் அப்போஸ்தலர்களை அநுக அனுமதி கேட்க வேண்டியிருந்தது (லூக். 22:31).
அவன் கர்த்தருடைய கையிலிருந்து யாரையும் "பறிக்க" முடியாது (யோ. 10:28).
எதிர்க்கும்போது, அவன் ஓடுகிறான் (யாக். 4: 7).
நரகத்தில் தள்ளப்படும்போது அவன் எதிர்க்க சக்தியற்றவனாக இருப்பான் (வெளி 20:10).
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக