சனி, 15 பிப்ரவரி, 2020

#757 - பாவம் மன்னிக்கப்பட வேதத்தை மனனம் செய்யலாமா?

#757 - *பாவம் மன்னிக்கப்பட வேதத்தை மனனம் செய்யலாமா?* என் கடந்த கால பாவங்களுக்காகவும்...இனிமேல் நான் வாழ விரும்பி...கர்த்தருக்கு விருப்பபட்ட வாழ்க்கைக்காகவும்...நான் வேதத்தில் உள்ள நீதிமொழிகளை முழுவதும் மனப்பாடம் செய்ய விரும்புகிறேன்...வேண்டுதல் போல... இப்படிச்செய்யலாமா...அல்லது என் பாவம் மன்னிக்கப்பட ஞானஸ்நானம் பெற வேண்டுமா...??

*பதில்*
பாவ மன்னிப்பிற்காக வேதாகமம் முழுவதும் மனப்பாடம் செய்தாலும் பிரயோஜனமில்லை என்றே வேதம் சொல்கிறது.

ஏனென்றால் – அவை யாவும் நம்முடைய கிரியைகள் / முயற்சிகள் தான்.

2 தீமோ. 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

ரோ. 11:6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால் கிரியையானது கிரியையல்லவே.

நம் சொந்த முயற்சியினால் பாவங்களை போக்கிக்கொள்ள முடிந்தால் பொய் சொல்லாமல் திருடாமல் நன்மையையே செய்து வாழும் அநேகர் பரலோகம் போய்விடலாம் என் நினைப்பது போல் ஆகிவிடும் !!

ஆயுட்காலம் முழுவதும் சம்பாதித்ததை கொடுத்தாலும் பரலோகத்தில் ஒரு அடி நிலம் கூட நம்மால் வாங்க முடியாது !!

எருசலேமிலும் சீனாய் மலையிலும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் இடம் வாங்கி கொண்டு அங்கு வீட்டை கட்டினாலும் பிரயோஜனம் இல்லை.

இயேசு கிறிஸ்து வரும்போது இந்த பூமியே அழிந்து விடும் என்று வேதம் சொல்லியிருக்க இவ்வுலகில் எங்கு எதை செய்தாலும் அது நமது வாழ்வின் சுகத்திற்கேயன்றி வேறெதற்கும் உதவாது. வியாபாரிகளின் யுக்தியில் விலைபோகவேண்டாம். 2பேதுரு 3:10

உங்கள் பாவம் மன்னிக்கப்படுவதற்காக செய்ய வேண்டிய காரியத்தை வேதம் நமக்கு தெளிவான பதிலை கொடுத்திருக்கிறது.

*செய்யவேண்டியதாவது:*
1-கிறிஸ்துவின் போதனையை கேட்டு
2-விசுவாசித்து
3-பாவத்தை விட்டு மனந்திரும்பி
4-கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று உங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு
5-பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.

*ஆதார வசனங்கள்:*
மாற்கு 16:16, அப். 2:37-38, அப். 22:16, ரோ. 6:1-6

கிறிஸ்துவையே தலையாக கொண்டு,
அவர் போதனையை மாத்திரமே கடைபிடித்து,
உயிரற்ற கருவிகளோடில்லாமல்  இருதயத்தில் உணர்வடைந்து பக்தியுடன் பாடல்களை (வாயால்) பாடி, பயத்தோடும் நடுக்கத்தோடும் ஜெபம் ஏறெடுத்து, ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் கர்த்தருடைய பந்தியில் பங்கெடுத்து, கர்த்தருடைய உபதேசத்தின்படி சபை வளர்ச்சிக்கென்று காணிக்கையில் பங்கெடுக்கும் சபையாரோடு சேர்ந்து தேவனை தொழுது கொள்ளுங்கள்.

முடிவு பரியந்தம் இந்த விசுவாசத்தில் நிலைத்திருந்தால் அப்போது கிறிஸ்துவின் வருகையில் நாம் ஒன்றாக பரலோகத்தில் ஒருவரை ஒருவர் காணமுடியும்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக