சனி, 15 பிப்ரவரி, 2020

#758 - நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ?

#758 - *நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ?* சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 12:51

இந்த வசனத்தை விளக்கவும்

*பதில்*
மீகா 7:6ல் தீர்க்கன் மூலமாக தேவன் இந்த ஜனங்களுக்கு சொன்ன பகுதியை இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் குறிப்பிடுகிறார்.

கிறிஸ்து தனது வருகையின் பொருள் கருத்து வேறுபாட்டையும் சர்ச்சையையும் உருவாக்குவதாக இங்கே சொல்லவில்லை.

ஏனென்றால் அவர் சமாதான பிரபு (ஏசா 9:6; ஏசா 11:6; லூக்கா 2:14).

ஆனால் அவர் வருவதன் விளைவுகளில் இதுவும் ஒன்று என்று அவர் கூறுகிறார்.

அவரை எதிர்த்த ஒரு குடும்பத்தின் ஒரு பகுதி அவரை நம்புபவர்களுக்கு எதிராக தங்களை அமைத்துக் கொள்ளும்.

சுவிசேஷத்தின் நிமித்தம் அல்ல - மனிதர்களின் துன்மார்க்கமே / அல்லது கீழ்படியாமையே பிரிவினைக்கு காரணமாக அமைகிறது.

கிறிஸ்துவின் போதனைக்கும் தற்கால பெருவாரியான நடைமுறையையும் கவனித்தாலே ஏன் இந்த பிரிவினை என்று நாம் அறியலாம்.

பயத்தோடும் பக்தியோடும் தொழுகை செய்ய சொல்கிறது வேதம் (எபி 12:28) ஆனால் ஆட்டமும் நடனமும் கூச்சலும் ஊளையுமாக மேள தாளத்தோடு சபை என்ற பெயரில் கேளிக்கை களியாட்டு கூடுகையாக நடப்பதை உலகமறியுமே..

கிறிஸ்துவின் போதனைக்கு விரோதமாக இவர்கள் கீழ்படியாததன் விளைவு பிரிவினை வந்தது !!

அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் அனைவரும் ஒன்றுபடும் வரை இந்த பிரிவினை இருக்கும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக