#755 - *யார் யார் இயேசு கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்? நாம் யாவரும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்போமா அல்லது பரலோகத்திற்கு
போவோமா?
நான் வேற்று மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு வந்தேன்.
நிறைய கேள்விகள் உள்ளது.
இன்றைய காலங்களில் அநேகர் பரலோகம் போய்விடுவோம் என்கிறார்களே. அப்படியென்றால்
இயேசுவின் 1,000 வருடம் எங்கு நடக்கும்?
*பதில்*
இயேசு
கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில்:
அது
வரை மரித்த யாவரும் (நல்லோர் தீயோர்) புதிய அழிவில்லாத சரீரம் கொடுக்கப்பட்டு
எழுந்திருப்பார்கள்.
அந்த
க்ஷனம் வரை உயிரோடிருப்பவர்களுக்கும் இந்த அழிவுள்ள சரீரம் மாற்றப்பட்டு அழிவில்லாத
புதிய சரீரம் கொடுக்கப்படும்.
அனைவரும்
கிறிஸ்துவின் முன்பு நின்று அவரவர் கிரியைக்கு தக்க தீர்ப்பை பெற்று பரலோகமும்
நரகமும் பெற்றுக்கொள்வர் (2 கொரி. 5:10,
யோ. 5:28-29, ரோ. 2:6-10, 1கொரி. 15:23, 51-53, 1 தெச. 4:15-17)
கிறிஸ்துவின்
இரண்டாவது வருகையில், அவரை ஏற்றுக்கொள்ளதவர்கள் அழிக்கப்படுவார்கள் மத். 3:11-12; லூக்.
3:16,17
அவருடைய
கட்டளைக்கு ;
கீழ்படிகிற
நாம் பரலோகத்திற்கும்,
கீழ்படியாத
அனைவரும் நரகத்திற்கும் போவது உறுதி.
2.*நாம் யாவரும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்போமா அல்லது பரலோகத்திற்கு
போவோமா*?
பரலோக
இராஜ்ஜியம் என்பது – சபையை குறிக்கிறது. கொலோ. 1:13
பரலோகம்
என்பது நியாயதீர்ப்பிற்கு பின் இருக்க வேண்டிய நித்திய ஸ்தலம்.
*எப்படி
பரலோக இராஜ்ஜியம் சபையை குறிக்கிறது*?
கிறிஸ்துவால்
அழைக்கப்பட்ட சீஷர்கள் (அப்போஸ்தலர்கள் – மத். 16:24) அங்கே நின்று கொண்டிருந்தனர். இந்த
சம்பவத்தை மாற்கு 8:34-9:1, லூக்கா 9:23-27லிலும்
காணமுடியும்.
தன்
சபையை கட்டுவேன் என்றார் கிறிஸ்து (மத். 16:18).
தொடர்ந்து
பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோள்களை பேதுருவுக்கு தருவேன் என்றார். (வ19)
அந்த
சாவியை (சுவிசேஷத்தை -யோ. 3:3-5) உபயோகித்து பேதுரு முதல் முதல் யூதர்கள் மத்தியில்
(அப். 2) இராஜ்யமாகிய சபை துவங்கப்பட்டது.
அது
போலவே முதல் முதலில் புறஜாதிகளின் மத்தியிலும் பேதுருவின் (அப். 10) மூலமாக
ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
தம்முடைய சீஷர்கள் “நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில்
போஜனபானம்பண்ணுவீர்கள்.....” என்றார் கர்த்தர் (லூக். 22:30), இது கர்த்தருடைய இராப்போஜனத்தை திருச்சபை கடைப்பிடிப்பதில்
நிறைவேற்றப்படுகிறது (1 கொரி. 10:16, 21).
அப்போஸ்தலன்
யோவான் ஆசியாவின் ஏழு சபைகளுக்கு எழுதியபோது (வெளி. 1: 4), கிறிஸ்துவின் “ராஜ்யத்தில்” அவர்களுடன்
பங்குதாரராக இருப்பதை அவர்களுக்குத் தெரிவித்தார் (வெளி. 1: 6, 9).
அதே
வேளையில் கிறிஸ்துவின் வருகையில் அனைவரும் நியாயதீர்ப்படைந்து *நித்தியமான* தேவனுடைய
இராஜ்ஜியத்தில் பிரவேசிப்போம்.
"பல இன்னல்களின் மூலம் நாம் *தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க
வேண்டும்*" என்று பவுல் கிறிஸ்தவர்களுக்கு எச்சரித்தார்
(அப்போஸ்தலர் 14:22).
"கர்த்தர்
எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து,
தம்முடைய *பரமராஜ்யத்தை* அடையும்படி காப்பாற்றுவார்; " (2 தீமோ. 4:18). என்றார் பவுல்.
இதேபோல், விசுவாசிகளுக்கு "நம்முடைய கர்த்தரும்
இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய *நித்திய ராஜ்யத்துக்குட்படும்* பிரவேசம்
உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும். என்று பேதுரு எழுதினார் (2 பேதுரு 1:11).
ராஜ்யம்
என்ற சொல்லைப் பற்றி பல தவறான கணிப்புகளும் கருத்துக்களைக் வைத்து பறைசாற்றி
புத்தகங்களும் எழுதிக் கொண்டு இருக்கும் இந்த காலங்களில், கவனமாக *வேதாகமத்தை சரியாய் பகுத்து*
படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவின்
இராஜ்ஜியம் என்பது கிறிஸ்து துவங்கிய சபையை குறிக்கிறது (கொலோ. 1:13)
தான்
தற்போது ஆளுகை செய்து கொண்டிருக்கும் இராஜ்ஜியத்தை தமது வருகையில்
அனைவரையும் சேர்த்து, நியாயந்தீர்த்து கடைசியாக தமது இந்த இராஜ்யத்தை பிதாவானவர் கையில்
ஒப்புக்கொடுப்பார் (1கொரி. 15:23-25)
அங்கே
நின்றவர்கள் சிலரை தவிர அனைவரும் கிறிஸ்துவின் இராஜ்யமாகிய சபை துவங்கின நாளில்
இருந்தார்கள் (மாற்கு 9:1, அப். 2:14)
இந்த
சம்பவத்தை காணமுடியாமல் விடுபட்டவர் யூதாஸ் ஸ்காரியோத்து (அப். 1:18, மத். 27:5)
3.*இன்றைய காலங்களில் அநேகர் பரலோகம் போய்விடுவோம் என்கிறார்களே.
அப்படியென்றால் இயேசுவின் 1,000 வருடம் எங்கு நடக்கும்*?
இரகசியமாக
இயேசு கிறிஸ்து வந்து தன்னுடைய ஜனத்தை மாத்திரம் கூட்டி கொண்டு அர்மகெதோனில் போர்
புரிந்து எல்லா நாட்டு இராஜாங்கத்தையும் வீழ்த்தி தனக்கு கீழ் ஒரு இராஜ்ஜியத்தை
ஏற்படுத்தி 1000 வருஷம் அரசாள போகிறார் என்று சொல்லப்படுவது முழுமையான கற்பனை கதை....
*யாருக்கு
அவர் பயப்பட வேண்டும்*?
இரகசியமாக வருவதற்கு...
பரம இராஜாவாகிய அவர் தாரை தப்பட்டையோடு கம்பீரமாக அவர் வருவார் -
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து
இறங்கிவருவார்; 1தெச. 4:16
..கிறிஸ்து
வரும் போது - கண்கள் யாவும் அவரைக் காணும்... பூமியின் கோத்திரத்தாரெல்லாரும்
அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.. (வெளி. 1:7)
வெளி.
6:15-17, 18:15-19; மத். 24:30; லூக். 23:28-30
*நிகழ்வுகளை
பட்டியலிடுகிறேன்*:
1-
*எல்லா ஜனங்களும் பார்ப்பார்கள்* (வெளி. 1:7,
6:15-17, மத். 24:30, லூக்கா
23:28-30) ... இரகசியமாக அல்ல பகிரங்கமாக அனைவரும் பார்க்கமுடியும்.
2-
*எதிர் பாராத விதமாக – சட்டென்று நொடிபொழுதில் இயேசு கிறிஸ்து வருவார்*. (மத்.
24:44)
3-
வானங்கள் அழியும் – பூதங்கள் (காற்று/நெருப்பு/தண்ணீர்/பாறை/கல் என்று அனைத்தும்)
நெருப்பினால் எரிந்து உருகிப்போம் (2பேதுரு 3:10) - இரண்டாவது வருகையிலேயே எல்லாம்
அழிந்து விடும்போது - மீதம் யாருமே இருக்க மாட்டார்கள்.
4-
பூமியும் அதிலுள்ள சகலவைகளும் சகல கிரியைகளும் கட்டிடங்களும்
பொருள்களும் அழிந்துபோகும் (2பேதுரு 3:10) ... இரகசியமாக அல்ல பகிரங்கமாக
அனைவரும் பார்க்கமுடியும்.
5-
கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும்
வானத்திலிருந்து இறங்கிவருவார்; (2தெச. 4:16) .. இரகசியமாக
அல்ல பகிரங்கமாக அனைவரும் பார்க்கமுடியும்.
6-
அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (2தெச.
4:16)
7-
பின்பு, உயிரோடிருக்கும்
நாமும் ஒரு நொடி பொழுதில் மறுரூபப்படுவோம். (2தெச. 4:17, 1கொரி.
15:51)
8-
அனைவருக்கும் புதிய அழிவில்லாத சரீரம் கொடுக்கப்படும் (1கொரி. 15:44)
9-
*அனைவரும்* கிறிஸ்துவுக்கு முன் நிற்போம். அப்போது வசனத்தின்படி அனைவரும்
நியாயந்தீர்க்கப்பட்டு அவரவர் செய்கைபடி நரகமும் பரலோகமும் அனுப்பி
வைக்கப்படுவார்ககள் (யோ. 12:48, சங். 9:17)
*இரகசியமாக அல்ல – பகிரங்கமாக கிறிஸ்து வருவார் – மாரனாதா* !!
அவர்
*பூமிக்கு
ராஜாவாக போட்டி போடுவதாக இருந்தால்* கிறிஸ்து சிலுவையில் அறையப்படாதபடி அவர்
சீஷர்கள் அப்பொழுதே சண்டை போட்டு போராடியிருப்பார்கள். (யோ. 18:36)
சகல
துர்குணங்களையும் விட்டு அவர் வருகைக்கு தயாராவோம்!!
ஆண்டவரே
சீக்கிரம் வாரும். 2பேதுரு 3:12-14
வேதத்தில்
குறிப்பிடப்படும் (Numbers)
*எண்கள் அர்த்தம் உள்ளவை*.... (1000)ஆயிரம் – முழுமையை
குறிக்கிறது...
பல
தடவை ஒருவரை மொபைலில் தொடர்பு கொள்ள முயற்சித்து கிடைக்காமல் சில நாள் சென்று அவரை
நேரடியாக பார்த்தால் நாம் வழக்கமாக சொல்வோமே – என்னங்க ஆயரந்தடவ ஒங்களுக்கு ஃபோன்
போட்டேன் என்று... அது எண்ணிக்கையை அல்ல – முழுமையை குறிக்கறது.
இதை
குறித்ததான மிக தெளிவான வீடியோ செய்தியின் லிங்க் இந்த பதிவின் கடைசியில்
குறிப்பிடுகிறேன் - கேட்கவும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக