சனி, 8 பிப்ரவரி, 2020

#748 - இன்றைய நாட்களில் ஒரு மனிதன் தவறு செய்யும்போது ஆவியானவர் அவனைவிட்டு வெளியே போய்விடுவார் என்பது சரியா?

#748 - *இன்றைய நாட்களில் ஒரு மனிதன் தவறு செய்யும்போது  ஆவியானவர் அவனைவிட்டு வெளியே போய்விடுவார் என்பது சரியா? வேதத்தின்படி விளக்கம் தரவும்?*

*பதில்*
பாவம் இருக்கும் இடத்தில் பரிசுத்தத்திற்கு இடம் இல்லை – ஏசா. 59:2

துன்மார்க்கருக்கு கர்த்தர் தூரமாக இருக்கிறார் - நீதி. 15:29

அக்கிரமங்கள் செய்யும் போது நன்மையை வரவொட்டாதிருக்கிறது – எரே. 5:25

அக்கிரமத்தில் ஈடுபடும்போது அவர் மறைந்து இருப்பது மாத்திரம் இல்லாமல் கோபத்துடனும் இருக்கிறார் – ஏசா. 57:17

அவர் முகம் (பிரசன்னம்) மறைக்கப்பட்டு போகிறது, பட்சிக்கப்படும்படி அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் தொடரும் – உபா. 31:17-18

கசப்புகள் இருதயத்தில் வரும்போது தேவ கிருபையை இழக்கிறோம்  - எபி. 12:15-17

உப்பு தன் சாரம் குறைந்து போக வாய்ப்பு உள்ளதே – மத். 5:13

மறுதலிக்கிறவன் – மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறான் – மத். 12:45

தேவ வாரத்தையில் நிலைத்திராவிட்டால், வெட்டப்படுகிறான் – யோ. 15:2, 6

பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றும் உலகத்தின் அசுத்தங்களுக்கு சாய்ந்தவர்கள் பின் வாங்கி போனவர்கள் – 2பேதுரு 2:20-22

சத்தியத்தை அறிந்த பின்பும் தீங்கு செய்பவர்களை நியாயத்தீர்ப்பிற்கு எதிர்நோக்கியிருக்க வேண்டியதே – எபி. 10:26-27

தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தின் பரிசுத்தம் குலைந்தால் தேவ ஆவியானவர் தங்க இடம் இல்லாமல் போய்விடுகிறதே !! 1கொரி. 3:16, 1கொரி. 6:19, 1கொரி. 6:16

சாந்தம் இருந்தால் – கர்த்தர் சமீபமாக இருக்கிறார் என்று பொருள் – பிலி. 4:5

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக