லூக்கா 16: 9 - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவாருண்டாகும்படி,
அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச்
சம்பாதியுங்கள்.
அநீதியான உலகப்பொருளால் சிநேகிதரைச் சம்பாதித்தல் என்றால் என்ன?
*பதில்*
இதை
நன்கு புரிந்து கொள்ள, அது வழங்கப்பட்ட சூழலைப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
அநீதியான
வேலைக்காரரை குறித்த உவமை லூக்கா 15ல் தொடங்கி கொடுக்கப்பட்ட இந்த வார்த்தைகள் நான்காவதாகும்.
தேவனையும்
வேத வாக்கியங்களையும் குறித்த இயேசுவின் அறிவை பரிசேயர்களும் வேதபாரகரும் வீழ்த்த
முடியாததால் இயேசு கிறிஸ்துவை அவமானப்படுத்தும்படி அவர்கள் ஒரு பொதுவான தந்திரத்தை
தேடி முயற்சித்தார்கள்.
இயேசுவின்
பெயர் மிக பிரபலமாயிருந்ததால் தனியாக நின்று அவரை வீழ்த்த முடியாமல் பரிசேயர்களும்
வேதபாரகரும் கூட்டமாக சேர்ந்து யுக்திகளை வகுத்தனர்.
பாவிகளுடன்
சுற்றித் திரியும் ஒரு மனிதன் தானும் ஒரு பாவியாக இருக்க வேண்டும் என்ற கோணத்தை
பரிசேயரும் வேதபாரகரும் முன் நிறுத்தினர்.
இதன்
பின்னணியில் இயேசு நான்கு உவமைகளைச் சொல்லி பதிலளிக்கிறார்.
முதலாவது
காணாமற்போன ஆடுகளின் உவமை (லூக்கா 15: 3-7). ஒவ்வொரு ஆத்மாவும் கடவுளுக்கு
விலைமதிப்பற்றது மற்றும் காப்பாற்றுவதற்கான பெரும் முயற்சிக்கு மதிப்புள்ளது என்று
உவமை தெளிவுபடுத்துகிறது.
பாவம்
செய்த ஆண்களையும் பெண்களையும் அவர்கள் பாவிகளாக பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ இரட்சிக்கப்பட
வேண்டியவர்களாக அவர்களை கண்டார். இப்படி பரிசேயரும் வேதபாரகரும் தவறான
கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாவது
உவமை காணாமற் போன நாணயத்தை பற்றியது (லூக்கா 15: 8-10). மதிப்புமிக்கதாகக் கருதும் ஒன்றிற்காக
நிறைய முயற்சி செய்வோம். அவளிடம் வேறு ஒன்பது நாணயங்கள் இருந்தபோதிலும், இழந்த நாணயத்தை
முழுமையான தேடலை மேற்கொண்டு அதை மீண்டும் கண்டுபிடிப்பதில் தனது சந்தோஷத்தை
மற்றவர்களோடு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதை இயேசு கிறிஸ்து விளக்கினார்.
ஒரு
சிறிய வெள்ளித் பணத்திற்காக அவ்வளவு மதிப்பைக் கொடுத்தால், ஆத்மாவிற்காக
தேவனின் மதிப்பு எவ்வாறு இருக்கும்?
மூன்றாவது
உவமை கெட்ட குமாரனின் உவமை (லூக்கா 15: 11-32). நாம் அவருக்கு எதிராக
திரும்பும்போது கூட நாம் மனந்திரும்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை
இந்த உவமையில் அறிகிறோம்.
ஒரு
பாவி தன்னிடம் திரும்பும்போது தேவன் கடந்த கால எல்லா தவறுகளையும் மன்னிக்கவும்
மறக்கவும் முடியும்.
பரிசேயரும்
வேதபாரகரும் மூத்த மகனால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டனர்.
இறுதியாக, நீதியில்லாத ஊழியக்காரரின்
உவமை (லூக்கா 16: 1-13) என்ற நான்காவது உவமைக்கு வருகிறோம்.
இந்த
உவமையால் நாம் குழப்பமடையக்கூடும் என்றாலும்,
பரிசேயரும் வேதபாரகரும் இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டார்கள்
என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு தங்களைப் பற்றி தான் பேசுகிறார் என்பதை
அவர்கள் அறிந்தார்கள். லூக்கா 16:14.
எஜமானர்
தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்றுவதில் ஒரு ஊழியக்காரன் உண்மையுள்ளவனாக
இருப்பான் என்று இயல்பாகவே எதிர்பார்க்கிறோம்.
ஆனால்
நம்மில் எத்தனை பேர் உண்மையிலேயே தேவனுடைய உண்மையுள்ள ஊழியர்கள்?
எஜமானனுக்கு
போக வேண்டிய லாபத்தையும் மரியாதையையும் கனத்தையும் திருப்பி நமக்கு லாபமாக்குகிற
பழக்கம் இல்லாமல் இருக்கிறோமா?
ஊழியன் என்ற வேலையை செய்து எஜமானனை போல உட்கார விரும்பாமலா
இருக்கிறார்கள்?
சுருக்கமாக, நாம் அனைவரும்
"பாவம் செய்தோம், தேவனுடைய மகிமையைக்
இழக்கிறோம்... குறைக்கிறோம்" (ரோமர் 3:23). உவமையில் உள்ள மனிதனைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் அநியாய காரியதரிசிகள்.
இந்த
அநீதியான ஊழியக்காரன் தன் வாழ்க்கைக்காக செய்த இந்த ஏற்பாடு நம் ஒவ்வொருவரையும்
குறிக்கிறது. நம்மில் எத்தனை பேர் எளிதான வழியை, குறைந்த முயற்சி தேவைப்படும் வழியைத்
தேடுகிறோம்?
தன்
வேலையை இழக்கப் போவதாக முன்னறிவிக்கப்பட்டதால், தன் பெருமையை நிலைநாட்டிக்கொள்ள இந்த
அநீதியான ஊழியன் பிச்சையும் எடுக்க முடியாதே என்று அஞ்சி (லூக். 16:3);
தனது
எஜமானனின் சொத்துக்களை தன்னுடைய லாபத்திற்காக பயன்படுத்துகிறான்.
இயேசு
இந்த காரியத்தை பாராட்டவில்லை என்பதை கவனிக்கவும் –
"இவ்விதமாய்
ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள்
சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்." (லூக்கா 16: 8).
நம்
வாழ்க்கையும் அதிக நேரம் இன்னும் இல்லை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. காலம்
கொஞ்சம் தான். யாக்கோபு 4:14.
அநீதியான
உலக்பொருளால் தங்களுக்கு சிநேகிதரை சம்பாதித்துக்கொள்ளுகிற இந்த பழக்கம் இந்த
பிரபஞ்சத்தில் இருக்கிறதே – உங்களுக்கு பரலோகத்தில் அப்படியான நண்பர்கள் உண்டாகும்படி பிரயாசப்படுங்கள் என்றார்.
ஆங்கில
மொழி பெயர்ப்புகளை வாசிக்கும் போது இன்னும் தெளிவாக விளங்கும்.
(KJV) And
I say unto you, Make to yourselves friends of the mammon of unrighteousness;
that, when ye fail, they may receive you into everlasting habitations.
அநீதியான
உலகப்பொருளால் இருக்கும் நண்பர்களை நீங்கள் பரலோகம் போகும் போது உங்களை அவர்கள்
அங்கிருந்து வரவேற்கும்படி பரலோகத்திற்கென்று அவர்களை சம்பாதியுங்கள் என்பது
கருத்து.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக