சனி, 8 பிப்ரவரி, 2020

#746 - எசே. 18:15 மலைகளின்மேல் சாப்பிடாமலும் என்ற வசனத்தை விளக்கவும்

#746 - *எசே.  18:15 மலைகளின்மேல் சாப்பிடாமலும்?. இந்த வசனம் விளக்கம் தரவும்*

*பதில்*
பல முறை சொல்லிவருகிறதை மறுபடியும் நினைவு படுத்த முனைகிறேன்.

வேதாகமம் எழுதப்பட்டது தமிழில் அல்ல.

பழைய ஏற்பாடு எபிரேயத்திலும் 
புதிய ஏற்பாடு கிரேக்கத்திலும் எழுதப்பட்டவை.

நாம் பார்ப்பது போல அதிகாரங்களாகவும் தனிதனி வசனங்களாகவும் எழுதப்படவில்லை.

படிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்படியாக வேத வல்லுனர்கள், எழுதப்பட்ட சம்பவங்கள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில்;

பழைய ஏற்பாட்டை சுமார் 1250ம் வருடங்கள் பின்னதாக அதிகாரங்களாகவும் பின்னர் 300 ஆண்டுகளுக்கு பின்னர் தனிதனி வசனங்களாகவும் பிரித்தார்கள்.

100 ஆண்டுகள் கழித்து புதிய ஏற்பாட்டை அதிகாரங்களாகவும் பின்னர் தனிதனி வசனங்களாகவும் பிரித்தார்கள்.

ஆகவே நாம் வேதாகமத்தின் எந்த பகுதியையும் சரியாகவும் முழுமையாகவும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் – அந்த பகுதியை அந்த கருத்தோடு கூடிய முழுமையான வசனங்களை படிக்கும் போது அறிந்து கொள்வோம்.

நீங்கள் கேட்ட இந்த பகுதியின் முழு கருத்து எசேக்கியல் 18ம் முழுவதையும் படித்தால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். இருந்த போதிலும் சுருக்கமாக சொல்லவேண்டுமானால் – *விக்கிரக ஆராதனைக்காரர்கள்* உயரமான இடங்களை / மேடுகளை / மலைகளை கண்டதும் அங்கே பலியிடுவதும், அந்த பலிகளை அங்கேயே சமைத்து சாப்பிடுவதும் வழக்கமாக இருந்ததை இந்த வசனம் குறிப்பிடுகிறது. உபா 12:2, 2 இரா 16:4

இந்த பழக்கம் தமிழ்நாட்டிலும் அதிகமாக காணமுடியும்.. எந்த மலை உச்சியையும் கவனித்தால் அங்கே ஒரு கோயிலோ அல்லது ஒரு சிலுவையையோ நிறுத்தி வைத்திருப்பார்கள் – இது இப்படிப்பட்டதான விக்கிரக ஆராதனை வரலாற்றிலிருந்து விளைவு.

கீழே உள்ள வசனங்கள் தெளிவு படுத்துகிறது:

எசே 18:14 பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

எசே 18:15 மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,

எசே 18:16 ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,

எசே 18:17 சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

மலையின் மேல் சாப்பிடாதிருங்கள் – என்பது:
விக்கிரக ஆராதனை செய்யாதிருங்கள் என்பதை தெரிவிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக