#658 - *சோதனைக் குழாய் குழந்தை (test tube baby), பிறரின் உயிரணுக்களை தானம் (Sperm donation) பெற்று கொள்ளல்,... போன்ற முறைகளில் செயற்கையாய் கருதரித்து குழந்தை பெறுதல் சரியா*
*பதில்*
திருமணத்திற்கு பின் குழந்தையின்மை என்பது மற்றவர் சொல்லி புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு அது வேதனையான ஒன்று.
அவமானங்களும், தலைகுணிவும் சமுதாயத்திலும் சொந்த குடும்பத்திலுமே இருக்கும் என்பது மிகவும் கொடிதானது.
கணவன் / மனைவி ஒருவரை மற்றவர் விட்டு பிரிந்து விடுவாரோ என்ற பயம் இருவரையும் முதிர்ச்சியற்ற நிலைமையில் அதீதமாய் தொற்றிக்கொண்டு குடும்பத்தை சமாதானமின்மையாக்கி விடும்.
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை என்று தேவன் சொல்கிறார் - உபா. 32:39
கர்ப்பத்தை அடைப்பதும் திறப்பதும் தேவனுடைய கையில் இருக்கிறது – ஆதி. 16:2; 20:17; 30:2, 1சாமு. 1:5.
கர்ப்பத்தின் கனியை அவர் கரங்களில் இருந்து பெற்றுக்கொள்கிறோம் – சங். 127:4
பிள்ளைகள் நமக்கு பிறப்பது தேவனுடைய வாரிசு என்று வேதம் சொல்கிறது – சங். 127:4
மனிதனுக்கு ஞானத்தை கொடுத்தது தேவன் – யாத். 31:6
மருத்துவம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி என்பது தேவனுடைய கிருபையே.
தேவனுடைய கட்டளைக்கு உட்பட்டு அதை பயன்படுத்தும் போது நமக்கு ஆசீர்வாதம் கிடைப்பதில் எந்த தடையும் இருக்காது.
பிள்ளையில்லாமல் வயது சென்ற போதும் சகரியாவும் எலிசபெத்தும் *கர்த்தரின் சகல கற்பனைகளிலும் நியமங்களிலேயும் குற்றமற்றவர்களாய் நடந்து கொண்டது* உலக மக்கள் அனைவருக்கும் பொிய பாடம் – லூக்கா 1:6
ஆகவே எந்த சூழ்நிலையிலும் சொந்த லாபத்திற்காக தேவன் வகையறுத்த எல்கையை கடந்துச்செல்ல முயற்சிக்கக் கூடாது.
செயற்கை முறையில் கருத்தரிக்க வேண்டிய நிர்பந்தம் என்பது நானறிந்து 2 வகைபடுகிறது.
1-மனைவி தனது கர்ப்பத்தை தாங்க பெலனில்லாமை.
2-அல்லது மனைவி கணவன் இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்கும் கருமுட்டையில்லாமை.
மனைவியானவள் கருவுற இயலாமையின் காரணத்திற்காகவோ / கர்ப்பத்தை தாங்க இயலாமையின் காரணத்திற்காகவோ *கணவனின் விந்தணுக்களை எடுத்து வாடகைத் தாயை அமர்த்தி குழந்தையை பெற்றுக்கொள்வது வேதத்திற்கு முரணானது. அது தவறு*.
இந்த முறையில் கணவணின் விந்தும் வேறொரு பெண்ணின் கருவும் இணைகிறது.
தான் திருமணம் செய்து கொள்ளாத ஒரு ஆணின் கருவை செயற்கையாகப் பெற்றுக்கொண்ட ஒரு பெண்; மாம்சத்தில் (டெஸ்ட் ட்யூப் மூலமாக கரு+விந்து சேரும்போது) இருவரும் ஒரு மாம்சமாகிறார்கள். ஆதி 2:24
** இதற்கு பதிலாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது – ஏற்றது.
மேலும்,
ஒரு ஆண் சுமாராக 500 மில்லியன் விந்தணுக்களை ஒவ்வொரு முறையும் வெளியிடுகிறவனாக இருக்கிறான்.
ஒரு பெண்ணின் (மனைவி) கருவும் ஆணின் (கணவன்) விந்தும் இணை சேர்ந்து பல காரணங்களால் கர்ப்பம் ஆக முடியாமல் இருக்கும் பட்சத்தில்: கணவன் மனைவியின் கரு+விந்தை செயற்கையாக *மனைவியின் வயிற்றிலேயே விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் வளர்த்து பிள்ளையை பெற்றுக்கொள்வதில் எந்த விதி மீறலும் இல்லை*.
மனிதன் எவ்வளவு முயன்றாலும் உயிரை கொடுப்பது நம் தேவன் மாத்திரமே !! ஆதி. 33:5,; 48:4, யோசு. 24:3-4, 1சாமு. 1:19-20, 27, ஏசா. 8:18
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக