செவ்வாய், 7 செப்டம்பர், 2021

கர்த்தருக்கு உண்மையாயிருந்தால் வெற்றி நிச்சயம்

*கர்த்தருக்கு உண்மையாயிருந்தால் வெற்றி நிச்சயம்*

By : Eddy Joel Silsbee

 

எல்லா இடுக்கன்களுக்கும் விக்கி இரட்சிக்கும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.

 

40 வருடங்களாக இஸ்ரவேலை ஆண்டு *வெற்றிகளை* குவித்த தாவீது அத்தனை ஆண்டுகளும் *போராடினதாலேயே* அந்த வெற்றிகள் சாத்தியமாயிற்று !! 1இரா. 2:11, 1நாளா. 29:27-28, 22:8

 

போராடாமல் வெற்றியை பெறவேண்டுமெனில்;

எப்படி அடிப்படை சத்தியம்கூட முறையாக அறியாமல் B.Th, M.Th, M.B.A போன்ற பட்டங்கள் லோக்கல் மார்க்கெட்டில் பணம் கொடுத்தால் கிடைக்கிறதோ அதுபோல போராடாமலேயே வெற்றியை தனக்குத் தானே சொந்த பணத்தில் விளம்பரப்படுத்திக்கொள்ளமுடியும்.

 

தாவீது ஒரு நாட்டுக்கே ராஜா என்றாலும் திகிலும், வனாந்தர வாழ்கையும், போராட்டங்களும், எதிரிகளும், விரோதிகளும், பொய் சாட்சிக்காரர்களும், தூஷிக்கிறவர்களும் எப்போதும் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. 1நாளா. 28:3

 

அனைத்திலும் ஜெயம் பெற அவர் கடைபிடித்த ஆயுதங்கள் *ஜெபம்* மற்றும் *கர்த்தருடைய ஆலோசனை* ! - 1சாமு. 22:5, 1இரா. 1:32, அப். 13:22

 

பிரச்சனைகள் கடந்து போகும் மட்டும் தேவனின் செட்டையின் கீழ் மறைந்து கொண்டார் (சங். 57:1)

 

ஆபத்து நேரங்களிலும், மற்றவர்கள் எதிர்த்த போதும் தேவனே அடைக்கலம் என்று அவரை சார்ந்து இருந்தார். (சங். 144:2)

 

தான் எப்பொழுது கூப்பிட்டாலும்  தேவன் செவி கொடுப்பார் என்கிற நம்பிக்கையும், தேவன் தனக்குச் செவி கொடுக்க கூடிய அளவில் தாவீதின் வாழ்கையும்  இருந்தது (சங். 18:6)

 

அப்படி ஒரு அற்பணிப்பு நம்மிடத்திலும் காணப்படட்டும். அப்பொழுது நமக்கு எதிராய் வரும் குதிரைகளானாலும் எருமைகளானாலும் தேவன் நம் பட்சத்த்தில் ஜெயத்தை கட்டளையிடுகிறார். சங். 22:12, நீதி. 21:31

 

பொறுமையாய் இருந்து அவரை மாத்திரமே சார்ந்திருந்தால் (யாத். 14:14) சகலமும் நமக்கு ஜெயமாகவே இருக்கும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/glrnXejm4AA

*Please Subscribe & Watch* our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக