வெள்ளி, 6 டிசம்பர், 2019

#657 - எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டா?

#657 - *எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டா?*

1கொரி. 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

1தீமோ. 4:6 இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்.

இது குறித்து விளக்கம் தாங்க பிரதர் 1கொரி. 15:22, 1தீமோ. 4:6 வசனங்கள்படி எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டா?

*பதில்*
ஆதாம் செய்த பாவத்தினால் உலக மக்கள் அனைவரும் பாவத்திற்குள்ளானார்கள்.

ஆனால் யார் தேவனுடைய வார்த்தைக்கு செவி சாய்த்து கீழ்படிந்தார்களோ அவர்கள் பரிசுத்தம் அடைந்தார்கள்.

உதாரணத்திற்கு : ஆபிரகாம் / ஏனோக்கு போன்ற மற்றும் எண்ணுக்கடங்கா தேவ ஜனங்கள் ஆதாமிற்கு பின்னதான சந்ததி தானே.

தேவன் மோசேயின் காலத்தில் ஒரு குறிப்பிட்ட ஜனத்தை தமக்கென்று பிரித்தெடுத்தார் லேவி. 20:24

கிறிஸ்துவின் சிலுவையில் பிரிவை தகர்த்து போட்டு உலக மக்கள் அனைவரும் பூலோகத்தாரும் பரலோகத்தாரும் ஒன்று சேர்க்கும் முயற்சி நடந்தேறியது. ரோ. 10:4, கொலோ. 1:20, எபே. 2:14

யாரெல்லாம் கிறிஸ்துவின் வார்த்தைக்கு செவிசாய்த்து அவரை விசுவாசித்து மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் எடுத்துக்கொள்பவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள். மாற்கு 16:16

(இக்காலங்களில் லாவகமாக இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் என்கிற வேதத்தில் சொல்லப்படாத முறையை மனிதர்கள் உட்புகுத்தியிருக்கிறார்கள் கவனம் !!)

இயேசுவின் கட்டளையின் படி வாழ்ந்து முடிவு பரியந்தம் தங்களை காத்துக்கொள்கிறவர்கள் அனைவருக்கும் நித்திய ஜீவனுண்டு யூதா 1:21

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரம் அல்ல ஏற்றுக்கொள்ளாதவர்களும், கிறிஸ்துவின் வருகையில் மகிமையின் / அழிவில்லாத சரீரத்தோடு உயிரோடு எழுத்திருப்பார்கள் 1தெச. 4:16, 1கொரி. 15:52, 2பேதுரு 2:9, 2தெச. 1:7-8, அப். 24:15, யோ. 5:28-29

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக