#659 - *யோசுவாவின் நாளில் ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின்
பாதிக்கோத்திரத்தார் இவர்களின் யுத்தவீரர்கள் யோர்தானை கடந்து அக்கரையில்
யோசுவாவுடன் துணையாக சென்று யுத்தத்தில் உதவிசெய்தனர், பிறகு
எவ்வாறு இவர்கள் யோர்தானுக்கு இக்கரைக்கு வந்தனர்*
*பதில்*
ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் யோசுவாவிற்கு
துணையாக தங்கள் பெண்சாதிகளும்
பிள்ளைகளும் மிருகஜீவன்களும்,
மோசே அவர்களுக்கு
யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் விட்டு தங்களிலுள்ள
யுத்தவீரர் யாவரும் தங்கள்
சகோதரருக்கு முன்பாக அணியணியாய்க் கடந்துபோக முன்வந்தார்கள்.
கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும்
உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச்
சுதந்தரித்துக்கொள்ளுமட்டும்,
அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்;
பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு
இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான
தேசத்துக்குத் திரும்பி,
அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக என்று யோசுவா சொல்லியிருந்தார் - யோசுவா
1:12-15
சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற
ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து
ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நின்ற போது அனைவரும் யோர்தானைக் கடந்து போகத்
தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள் -
யோசு 3:13-14
இவர்களுக்கு
ஒப்புக்கொடுக்கப்பட்டவற்றை செவ்வனே செய்து முடித்தபின் யோசுவா இவர்களை சகல சம்பத்தோடே
திருப்பி அனுப்புகிறார். வசனங்கள் கீழே :
யோசுவா
22:3-4 நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக்
கைவிடாமல், உங்கள்
தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள். இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம்
உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே,
அவர்களை இளைப்பாறப்பண்ணினார்;
ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குக்
கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் *கூடாரங்களுக்குத்*
திரும்பிப்போங்கள்
என்றான்.
யோசுவா
2:8 நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும்,
மகா ஏராளமான ஆடுமாடுகளோடும்,
பொன் வெள்ளி வெண்கலம் இரும்போடும்,
அநேக வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்கள்
சத்துருக்களிடத்திலே கொள்ளையிட்டதை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக்கொள்ளுங்கள்
என்றான்.
யோசுவா
22:9 அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக்
கோத்திரத்தாரும், கர்த்தர்
மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே,
தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப்
போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள
சீலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள்.
**
எந்த அவசரமும் இல்லாமல் இவர்கள் திரும்பி போவதற்கான *அவகாசம் அதிகமாக இருந்தது*.
மேலும் *அதிக சம்பத்தோடு திரும்பினார்கள்* என்று வசனத்தில் பார்க்கிறோம்.
நேரடியாக
இந்த அதிகாரத்தில் இவர்கள் எவ்வாறு திரும்பினார்கள் என்று சொல்லப்படவில்லையென்றாலும்
நியாதிபதிகள் 5:17ன் படி இவர்கள் தங்களுக்கான படகுகளை செய்து திரும்பியிருக்கலாம்
என்று தோன்றுகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக