#633 - *கிறிஸ்தவர்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?*...
*பதில்*
கி.பி. 360ம்
ஆண்டில் கிறிஸ்துமஸ் என்ற பண்டிகையை கத்தோலிக்கர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.
டிசம்பர்
25க்கும் கிறிஸ்துவிற்கும் சம்பந்தமேயில்லை என்பது வேத நிகழ்வுகளின் அடிப்படையிலும்
கிறிஸ்துமஸ் என்ற பண்டிகையின் மூலஆதாரமும் தெளிவாக விளக்குகிறது. லூக்கா 2:8, 2:3
கிறிஸ்துவின்
பிறந்த நாளை கொண்டாடியதாக வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
கிறிஸ்துவின்
இறந்த நாளை நினைவு கூறும்படி தான் கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.
மேலும்
ஆரம்பத்தில் கத்தோலிக்கர்கள்
மேரி
க்ரைஸ்ட் மாஸ் (Mary
Christ Mass) என்று துவங்கினார்கள்.
மேரி
குறிக்கப்படுவதால் – கத்தோலிக்கர் அல்லாதவர்கள் கொண்டாடுவதில்லை என்று மேரியை
மெர்ரி ஆக்கினார்கள் (Merry
Christ Mas). ஆகவே மற்ற கிறிஸ்தவ மதத்தினர் கொண்டாட ஆரம்பத்தனர்.
மற்ற
மதத்தினரையும் உள்ளே இழுக்க வேண்டும் என்று வியாபாரிகள் விரும்பியதால்
க்ரைஸ்ட்ஐயும் எடுத்துப்போட்டார்கள் – இப்போது மேரியும் இல்லை கிறிஸ்துவும் இல்லை –
வெறும் களியாட்டும் குத்தாட்டமுமாகி – X-Mas
ஆகிவிட்டது.....
எக்ஸ்
என்றால் – ஒன்றுமில்லாத கூட்டம் !!!
Mary
Christmas became Merry Christ mas became now X-Mas !!!
படிக்க
கொஞ்சம் கஷ்டமானாலும் – இது தான் உண்மை.
கிறிஸ்துவை
நினைக்கிறோம் என்று கிறிஸ்துவிற்கு விரோதமாக செய்து விடகூடாது.
*** அட்டை படத்தில்
வரும் மூன்று சாஸ்திரிகள் – வேதாகமத்தில் இல்லை !!
*** அட்டை படத்தில்
இருப்பது போல் மூன்று சாஸ்திரிகளோடு + பிறந்த
குழந்தை + மாட்டு தொழுவம் - வேதாகமத்தில் இல்லை
!!
இந்த வேதாகமத்திற்கு
விரோதமான பண்டிகையிலிருந்து விலகியிருப்பது ஆசீர்வாதம்.
வேறெந்த நாளிலும்
வெளியே வராத அநேகர் அந்த நாளிலாகிலும் சபைக்கு வருகிறவர்களை நான் உதாசீனபடுத்தாமல்
– அன்று சத்தியத்தை சொல்லி கொடுத்து பிரயோஜனபடுத்திக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு....
பாவிகளை இரட்சிக்க
இயேசு கிறிஸ்து வந்த நோக்கத்தையும், அவர் கொடுத்த போதனையையும் கடைபிடிக்கும் போது நிச்சயம்
பரலோகம் போக முடியும்.
அவர் கூறாததை
செய்யும் போது – நிச்சயம் பரலோகம் போக முடியாது.
கிறிஸ்துமஸ்
என்றதும் - *இயேசுவை விட்டுவிட்டு* கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், 3 சாஸ்திரிகள்
பின்னாடி உலகமே போய்க்கொண்டு இருக்கிறது. இவைகளை
எல்லாம் வேதத்தில் தேடி தேடி நானும் அலுத்து போனேன். *வேதாகமத்தில் எங்கேயும் காண முடியவில்லை*.
வேதாகமத்தில்
இல்லாததை கடை பிடித்தல் தண்டனையை வருவிக்கும்.
பாவிகளை இரட்சிக்க
வந்த இயேசுவின் பிறந்த நாள் என்று சொல்லி, அன்று பிராந்தி கடையும் பீர் வியாபாரமும்
விபசார விடுதிகளும் களை கட்டுகிறது - வேதனையிலும் வேதனை.
6 லட்சம் புருஷர்கள்
மோசேயின் மூலம் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார்கள் – ஆனால் 2 பேர் மாத்திரம் தேவனுடைய
பேச்சை முழுமையாய் கேட்டதினால் கானான் தேசத்தில் பிரவேசித்தார்கள்.
போகிற போக்கை
பார்த்தால் வேதாகமத்தையே நைசாக மற்றிவிடுவார்களோ என்று தோன்றுகிறது !!
பாவத்தை விட்டு
– மீட்பரை பற்றிகொள்ளுவோம்.
தேவனுக்கு கீழ்படிவதை
காட்டிலும் மனுஷனுக்கு கீழ்படிவது உத்தமமாய் இருக்குமோ? அப். 5:29
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக