#1140 - *பல குடும்பங்கள் ஆலயத்திற்கு இப்பொழுது வருவதேயில்லை*. வேலையை விட்டு ஆலயத்துக்கு வா என்று பைபிளில் எங்கேயும் சொல்லவில்லைனு சொல்றாங்க. மேலும் நாங்கள் மோகன் சி பிரதர் மெசேஜ் கேட்கிறோம் அது எங்களுக்குப் போதும்னு சொல்றாங்க. நாங்கள் காணிக்கை அனுப்புகிறோம் அவர் எங்களுக்காக ஜெபிக்கிறார். நாங்களும் டிவியை பார்த்து அவர் கூடவே ஜெபம் பண்ணுகிறோம் இது சரிதான்னு சொல்றாங்க. ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு ஒருவரும் வருவதில்லை. டிவி பார்த்து வீட்டிலேயே இருக்கிறார்கள். வேத வசனத்தோடு கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் பிரதர்.
*பதில்* : இரண்டுபேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே *கூடியிருக்கிறார்களோ* அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார் இயேசு கிறிஸ்து !! மத். 18:20
தேவனை தொழுதுகொள்ளும்படி சீஷர்கள் *கூடிவந்தார்கள்*.
ஒன்றாய் கூடவேண்டியது அவசியம். அப். 20:7, ரோ. 16:5
பிதாவானவர் வானத்திலிருந்து பேசினதை பூமியிலிருந்த ஜனங்கள் கேட்டார்களே. யோபு 40:9, யோ. 12:29, 2பேதுரு 1:17, லூக்கா 3:22
அவர் வானத்திலிருந்தபடியே பூமியில் ஜனங்களிடம் பேசாமல் இறங்கிவந்து *நேரடியாய்* ஊழியம் செய்ய வேண்டுமோ? 1தீமோ. 3:16
வாரத்தின் முதல் நாளில் தேவ ஜனங்கள் ஆங்காங்கே கூடிவந்து தேவனை புகழ்ந்து பாடி துதித்து வேதம் வாசித்து/கற்று ஜெபித்து கர்த்தரின் பந்தியில் கலந்து அவரது மரணத்தை நினைவுகூர்ந்து, தேவனுக்கென்று காணிக்கைகளை சேர்க்கவேண்டியது அவசியம். 1கொரி. 16:1-5, அப். 20:7
வியாதி வந்தால் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடாமல் தொலைபேசியில் டாக்டரிடம் மருத்துவம் கேட்பார்களோ?
புதியதாக நமது தெருவில் பெட்டிக்கடையை ஒருவர் திறந்து வியாபாரம் செய்தால் சில மாதங்களில் இன்னொருவர் அதே தெருவில் வேறொரு கடையை திறந்து லாபம் பார்ப்பது போன்று இக்காலங்களில் இந்த மாதிரியான டிவி நிகழ்ச்சிகளால் ஜனங்கள் விசுவாசத்தை விட்டு வழுவி போனார்கள்.
செய்தியை தொலைகாட்சியில் கேட்பதில் தவறல்ல. ஆனால், தேவனை தொழுதுக்கொள்ளும்படி ஜனங்கள் ஆங்காங்கே கூடிவரவேண்டியது அவசியம்.
அடிப்படை விசுவாசத்தையே புரட்டி போட்டு, *இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம்* எடுக்கவேண்டும் என்று சொல்கிற ஏராளமான பிரசங்கியார்களை; நாம் வேத வசனத்தின்படி அடையாளம் கண்டு நமது விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவேண்டும். மாற்கு 16:16
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; *அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்*. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; *அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்*. மத். 7:13-14
சுகமும் சவுக்கியமும் நிறைந்து இருக்கும்போது இப்படிப்பட்ட வாதங்கள் யாவும் எழும்பும். தேவனுக்கு பயந்து அவரது வார்த்தைக்கு கீழ்படிபவர்கள் தேவனை முறையாய் ஒன்றுகூடி தொழுதுக்கொள்வார்கள். 1தெச. 5:3, செப். 2:15
யாக்கேயின் குமாரனாகிய ஆகூரின் வரிகளே நினைவிற்கு வருகிறது.. நீதி. 30:8-9 மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள். மல்கியா 1:6
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. சங். 103:11
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். சங். 103:13
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. சங். 103:17-18
*பி.கு. :* நாம் புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கிறோம். ஆலயம் என்பது கட்டிடம் அல்ல. (இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்தவர்களையல்ல) முறையான ஞானஸ்நானம் எடுத்து இரட்சிக்கப்பட்டவர்களையே ஆலயம் என்று வேதம் சொல்கிறது. 1கொரி. 3:16-17
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக