வியாழன், 28 நவம்பர், 2019

#632 *கேள்வி* ஆசிர்வாததிற்கும் பாக்கியவானிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ? ஆங்கிலத்தில் இரண்டிற்கும் blessed என ஒரே வார்த்தை உள்ளதே !!!! விளக்கவும்


#632
*கேள்வி*
ஆதியாகமம் 28: 1 - ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை *ஆசீர்வதித்து*, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல்,

Genesis 28: 1 - And Isaac called Jacob, and *blessed* him, and charged him, and said unto him, Thou shalt not take a wife of the daughters of Canaan.


மத்தேயு 5: 3 - ஆவியில் எளிமையுள்ளவர்கள் *பாக்கியவான்கள்*; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

Matthew 5: 3 - *Blessed* are the poor in spirit: for theirs is the kingdom of heaven.

ஆசிர்வாதம் Blessed
பாக்கியவான் Blessed

ஆசிர்வாததிற்கும் பாக்கியவானிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
ஆங்கிலத்தில் இரண்டிற்கும்  blessed என ஒரே வார்த்தை உள்ளதே !!!! விளக்கவும்

*பதில்*
1)
ஆதியாகமம் 28:1ல் தமிழ் வார்த்தையாகிய ஆசீர்வாதத்திற்கு *பாராக்* என்ற எபிரேய வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு:
-மண்டியிட; கடவுளை வாழ்த்துவது (வணக்கச் செயலாக) மற்றும்
(நேர்மாறாக) மனிதனை (ஒரு நன்மையாக);
(கடவுள் அல்லது ராஜாவை தேசத்துரோகமாக) சபிக்கவும்:
-ஏராளமாக ஒட்டுமொத்தமாக அனைத்து நிந்தனைக்கும் ஆசீர்வாதம் / சாபத்தை குறிக்கிறது.

பெரிதும் இந்த சொல் - உண்மையில் மண்டியிடுகிறது அல்லது தேவனை வணங்கி நன்றி சொல்வது என்ற பொருளில் பயன்படுகிறது. வேதத்தில் ஏறத்தாழ 330 இடங்களில் இந்த அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.

2)
மத் 5:3ல் மக்காரியோஸ் என்ற கிரேக்க வார்த்தையை தமிழில் பாக்கியவான் என்றும் ஆங்கிலத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றும் வருகிறது.

அதற்கு:
மகிழ்ச்சி என்றும் சந்தோஷம் என்றும் அதிர்ஷ்டம் என்றும் அர்த்தம்.

ஆவியில் எளிமை என்பதற்கு ஆவியில் ஏழ்மை என்றே உண்மையான பொருள்.

அதாவது – தான் தேவ ஆவியில் குறைவுபட்டவன் என்று எவன் ஒருவன் நினைத்து அதை இன்னும் அடையவேண்டும் என்று விரும்புகிறானோ அவன் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைவான் என்று பொருள்.

ஆவியில் ஏழ்மையுள்ளவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் / சந்தோஷமடைவார்கள், பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்யவும்.

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக