வியாழன், 28 நவம்பர், 2019

#634 - வேசித்தனம், விபச்சாரம் இரண்டையும் எவ்வாறு வேறுபடுத்துவது?

#634 - *வேசித்தனம், விபச்சாரம் இரண்டையும் எவ்வாறு வேறுபடுத்துவது?* இரண்டில் எது கடைசி காலங்களில் அதிகம் காணப்படும்...???

இவற்றில் எதில் ஓரினச்சேர்க்கை அடங்கும்? அல்லது இரண்டிலும் சேராதா?

*பதில்*
விபச்சாரம் என்பது உடலுறவில் ஈடுபடும் நபர்களில் ஒருவர் திருமணமானவராக இருத்தல்.

தான் திருமணம் செய்து கொள்ளாத ஒருவருடன் உடலுறவு கொள்வதற்கான ஒரு பரந்த சொல் - விபச்சாரம்

இதனால், வேசித்தனமும் விபச்சாரத்தில் அடங்கும். வேசித்தனம் மற்றும் விபச்சாரம் இரண்டும் பாவமே (எபிரெயர் 13: 4).

திருமணமாகாத ஒருவர் திருமணமான ஒருவருடன் உடலுறவு கொண்டால், அவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள்.

திருமணமாகாத நபர் திருமணமாகாத நபருடன் உடலுறவு கொண்டால், அவர்கள் வேசிதனத்தில் ஈடுபடுகிறார்கள்.

கடந்த காலத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது முக்கியமல்ல. அந்த நேரத்தில் எந்த சட்டம் மீறப்படுகிறது என்பதன் அடிப்படையில் பாவங்கள் விவரிக்கப்படுகின்றன.

வேசித்தனம் – விபச்சாரம் இதில் எது கடைசி காலத்தில் அதிகம் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இரண்டுமே பாவம் தான். இதில் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல.

ஓரினசேர்க்கை – அருவருப்பானது – லேவி. 18:22

பழைய ஏற்பாட்டு சட்டத்தின்படி ஒருவர் ஓரினசேர்க்கையில் பிடிபட்டால் – கொல்லப்படவேண்டும் – லேவி. 20:13

இயற்கை நியதிக்கு மாறானது – ரோ. 1:26-27

தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரிக்க முடியாதவர்கள் பட்டியலில் – இவர்களும் உண்டு - 1கொரி. 6:9-10

விபச்சாரமும் வேசித்தனமும் ஆண் பெண் சம்பந்தப்பட்டது.
இவை இரண்டிலும் வராதவை ஓரினச்சேர்க்கை.

சோதோம் கொமாரா பட்டணம் அழிக்கப்பட்டதற்கு இதுவும் ஒர் காரணம் !!
ஆதி. 19:5
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக