வெள்ளி, 25 அக்டோபர், 2019

#583 - தவறாக போதிப்பவர்களுக்கு என்ன முடிவு? அவர்களுக்கு மீட்பு உண்டா? இன்னும் எவ்வளவு காலம் இப்படி உளறிக்கொண்டிருப்பார்கள்?

#583 - *தவறாக போதிப்பவர்களுக்கு என்ன முடிவு?* அவர்களுக்கு மீட்பு உண்டா?
இன்னும் எவ்வளவு காலம் இப்படி உளறிக்கொண்டிருப்பார்கள்?

*பதில்*
உலகில் போதகர்களையும் தீர்க்கதரிசிகளையும் தேவன் வைத்திருக்கும் வரை பொய்யாக கற்பித்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.

எரேமியா பொய்யான தீர்க்கதரிசிகளைப் பற்றி புகார் செய்தார் - எரே. 5: 30-31

நியாயபிரமானத்தை இப்போதும் கடைபிடிக்கவேண்டும் என்று தவறாக கிறிஸ்தவர்களுக்கு போதித்தவர்களை கண்டிப்பது பவுலுக்கு பொிய சவாலாக இருந்தன - அப். 15:1-2

பொய்யான போதகர்கள் உதிப்பார்கள் என்று பவுல் எபேசிய மூப்பர்களை எச்சரித்தார் – அப். 20: 29-30

எருசலேமின் கடைசி நாட்களில் பொய்யான தீர்க்கதரிசிகள் இருப்பார்கள் என்று இயேசு முன்னறிவித்தார் - மத். 24: 10-11

சகோதரர்களிடையே தவறான போதகர்கள் இருப்பார்கள் என்பதை பேதுருவும் எச்சரித்தார் - II பேதுரு 2: 1-3

தவறான போதனைக்காரர்கள் அநீதத்தின் பலனை அடைவார்கள்.
மிக விஸ்தாரமாக அவர்களை குறித்து வாசிக்க வேண்டிய பகுதி 2பேதுரு 2:3-12

தவறாக போதிப்பவர்களை குறித்து நாம் தூஷனமாக பேசாமல் இருக்கும்படி நமக்கு மிகாவேல் தூதனின் வாக்கு உதாரணம் யூதா 8-10

அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.  (2கொரி. 2:17) சத்தியத்தை பறைசாற்றுகிறோம் எது சரி எது தவறு என்று சுட்டிக் காட்டுகிறோம். அது ஒவ்வொரு உபதேசியாளனின் சபை போதகனின் தேவ ஊழியனின் கடமை.

கீழ்படிவதும் கீழ்படியாததும் அவரவர் விருப்பம். அதற்கேற்ற பலனை அவரவர் அடைவர். 1கொரி. 3:15

கிறிஸ்துவின் வருகை வரை இந்த தவறான உபதேசியாளர்கள் இருப்பார்கள் 1கொரி. 11:19

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக