வெள்ளி, 25 அக்டோபர், 2019

#582 *கேள்வி* லூக்கா என்பவர் இந்த 70 பேரில் ஒருவர் என்கின்றனர்..


#582 *கேள்வி - இயேசு கிறிஸ்துவுக்கு 12 சீஷர்கள் என்று படிக்கிறோம். அதே சமயம். இந்த வசனத்தை வைத்து “இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்”  லூக்கா 10:1 - சீஷர்கள் 70 பேர் என்கின்றனர்... அதேபோல் லூக்கா என்பவர் இந்த 70 பேரில் ஒருவர் என்கின்றனர்.. விளக்கம் தந்து உதவுங்கள் நன்றி...

*பதில்*
இயேசு கிறிஸ்து 12 பேரை சீஷராக மாத்திரம் அல்லாமல் அப்போஸ்தலராகவும் அவர்களை தெரிந்து கொண்டார்.

வேதத்தில் சொல்லப்படும் அப்போஸ்தலர் என்பவர்கள் இயேசுவை நேரடியாக தங்கள் சொந்த கண்களால் கண்ட சாட்சியாக உள்ளவர்கள் அப். 2:32, 1யோ. 1:1-3, அப். 10:39-41

நடந்த யாவற்றையும் நினைப்பூட்டும்படி *அந்த அப்போஸ்தலருக்கு* பரிசுத்த ஆவியானவரை அனுப்புவேன் என்று இயேசு வாக்களித்தார் யோ. 15:26-27. அது நடந்தேறியது அப். 2:33, 4:33

தேவன் தாமே இதற்கு உறுதுணையாக நின்றார் எபி. 2:4

சீஷர்கள் எனப்படுபவர்கள் தங்கள் குருவை பின்பற்றுபவர்கள்.

அதாவது இயேசுவின் போதனையை பின்பற்றுகிற யாவரும் சீஷர்கள்.
நீங்களும் நானும் கிறிஸ்துவின் போதனைக்கு கீழ்ப்படிபவராகவும் அவரை குருவாக போதகராக ஏற்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் நாமும் சீஷர்கள் (மத். 28:19

ஆகவே 12 அப்போஸ்தலர்களும் சீஷர்கள் எனவும் அழைக்கப்பட்டனர் மத். 10:1
ஆனால் எல்லா சீஷரும் அப்போஸ்தலர் ஆகிவிட முடியாது.

அப்போஸ்தலர் என்ற கிரேக்க வார்த்தைக்கு அனுப்பப்பட்டவர் என்பது தமிழ் வார்த்தை. அல்லது தூதர் என்றும் சொல்வார்கள்.

ஆங்கிலத்தில் அம்பாசிடர் என்றும் மெசஞ்சர் என்றும் சொல்வார்கள்.

*உங்கள் 2வது கேள்வி*
லூக்கா 70பேரில் ஒருவரா என்பது?

லூக்கா இயேசுகிறிஸ்துவை நேரடியாக பார்த்ததில்லை என்பதை அவர் எழுதிய சுவிசேஷ புஸ்தகத்தின் ஆரம்பத்திலேயே காணமுடிகிறது.

லூக்கா 1:2 ஆரம்பமுதல் *கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே* அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,

லூக்கா 1:3 ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் *விசாரித்தறிந்த நானும்* உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,

லூக்கா 1:4 அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.

ஆகவே அவர் அந்த 70 சீஷர்களில் ஒருவராக இருக்கமுடியாது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக