#572 - *இது வேதத்திற்கு எதிரானது என்றும் எதிரானது அல்ல என்றும் - போதிப்பவர்
மதவெறி கொண்டவர் என்றோ வேதத்தின் படி உண்மையான ஆசிரியர் என்றோ எப்படி அறிந்து கொள்வது?*
*பதில்*
பரிசுத்த
ஆவியானவர் இதை குறித்து மிக தெளிவாக நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வசனங்கள்
கீழே :
1கொரி.
11:19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே
உண்டாயிருக்கவேண்டியதே.
அப்.
20:29-32
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப்
போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால்,
நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல்
அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும்
சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக்
கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும்
உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
2பேதுரு 2:1-3 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே
இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள்
இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத்
தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட
ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை
வருவித்துக்கொள்ளுவார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்;
அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். பொருளாசாயுடையவர்களாய்,
தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக
வசப்படுத்திக்கொள்ளுவார்கள்;….
1யோ. 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த
ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
இது
ஒரிஜினல் என்று கடைகாரர் தொிவித்தால் மாத்திரமே கண்டறியும் அளவிற்கு டூப்ளிகேட்
சாதனங்கள் சந்தையை ஆக்கிரமித்திருப்பது போல – யார் வேதத்தின் படி
நடக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு இன்று தவறான உபதேசம் கிறிஸ்தவம்
என்ற பெயரில் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.
இன்னும்
சொல்லப்போனால் இது டூப்ளிகேட் தான் விலையும் குறைவு அதே வேளையில் ஒரிஜினலை விட
நன்றாக இருக்கும் என்று கடைகாரர் சொல்லும்போது – தயங்காமல் வாங்கி செல்லும் மனப்பாங்கு
மக்களுக்கு வந்துவிட்டது போல –
தவறான போதனை, வேதத்தில்
இப்படி சொல்லியிருந்தாலும் நாம் நமக்கு ஏற்றார் போல மாற்றி அமைத்துக்கொள்வதில்
தவறில்லை என்று வேதத்திற்கு முரணான அநேக காரியங்களை கிறிஸ்தவம் என்ற பெயரில்
அநேகர் பின்பற்றிக்கொண்டிருப்பது வேதனையான ஒன்று.
பொய்யைக்
கண்டறிவதும், உண்மையிலிருந்து வேறுபடுத்துவதும் அவ்வளவு எளிதானது அல்ல.
ஏமாற்றப்படுவது
மிகவும் எளிதானது. கர்த்தருக்கு இது தெரியும், எனவே கெட்ட பழக்கங்களை காட்டிலும் புதிய
ஏற்பாட்டில் அவர் மதவெறியின் பாவங்களை மற்றும் ஆபத்துகளை குறித்து அடிக்கடி
எச்சரித்துள்ளார். இதில் தீவிரமாக இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட ஆபத்து குறித்து
நாம் விழித்திருக்கிறோமா?
பலர்
தங்கள் தீங்கு விளைவிக்கும் வழிகளைப் பின்பற்றுவார்கள் (II பேதுரு 2: 1-3).
இந்த
மோசமான ஓநாய்களால் நல்ல மனிதர்களும் வழிநடத்தப்பட நேரிடலாம் என்று பவுல்
அறிந்திருந்தார்.
ஆகவே, எபேசுவில்
கண்ணீருடன் இரவும் பகலும் எச்சரித்தார் (அப். 20: 29-32). அவர் தீமோத்தேயுவை கோணலானவைகளை
சரி செய்யும்படி அந்த இடத்திலேயே விட்டு சென்றார் (1 தீமோ. 1: 3-4).
கலாத்திய சபை
எவ்வளவு விரைவில் தவறான
பாதைக்கு மாறின என்று அறிய முடியும். எவ்வளவு தீவிரமாக மாறினதை குறித்து பவுல்
ஆச்சரியப்பட்டார்.
கலாத்திய
சபைக்கு அது
நடந்தால், அது
நமக்கும்
நிகழலாம்.
புறஜாதியினருக்கு அப்போஸ்தலர்கள் பிலிப்பியில்
உள்ள சபையை எச்சரிக்க சந்தர்ப்பம் இருந்தது.
அவர்களுடைய விஷயத்தில், அவர் தம்முடைய முன்மாதிரியை அவர்களுக்கு நினைவுபடுத்தி கண்ணீருடன்
எச்சரித்தார் (பிலி.
3: 17-19).
எபேசுவில் சிலர் தாங்கள் அப்போஸ்தலர்கள் என்று சொன்னார்கள், ஆனால் அவர்கள்
பொய்யர்கள் என்பதை கண்டறிந்தார்கள் (வெளி.
2: 2).
இன்றும்
அநேகர் தங்களை அப்போஸ்தலர் என்று பறைசாற்றுவதை காண முடியும். சிலர் பிரதான அப்போஸ்தலன்
என்றும் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். யார் அப்போஸ்தலனாக இருக்க முடியும் என்று
வரைமுறை வேதத்தில் உள்ளது (அப். 1:21-22)
மனிதர்களின் புத்திசாலித்தனம், தந்திரமான
வஞ்சகத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும் எபே.
4:14
வஞ்சகமுள்ளவர்களை பவுல் தீவிரமாக கவனித்தார் (II கொ. 11:12).
கர்த்தருடைய ஊழியர்கள் புறாக்களைப் போல கபடற்றவர்களாக
இருக்க வேண்டும்
- மத். 10:16; தீத்து 2: 7; பிலி. 2:15.
நல்ல
போராட்டத்தை
போராடுவதற்கு அனைவருக்கும் முழு கவசமும் விவேகத்தின் திறமையும் அவசியம் - எபி. 5:12-14; எபே. 6: 10-17; II கொ. 10: 3-6.
2கொரி. 11:13-15
அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள்,
கபடமுள்ள வேலையாட்கள்,
கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத்
தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும்
ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய
வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
குருடர் குருடரை வழிநடத்தினால் இருவரும் விழுவார்கள்.
சத்தியத்தை
பகுத்துப் போதிக்கிறார்களா –
அதாவது காலத்தை அறிந்து கிறிஸ்துவின் போதனையில் போதித்து நிலைத்திருக்கிறார்களா என்பதை
அறியும் போது யார் தவறானவர்கள் என்பதை தெளிவாய் அறிய முடியும் - எபி. 13:7
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக