#573 *கேள்வி - என் கணவர் இறந்து விட்டார் வயது 48. என்னால்
தாங்க முடியவில்லை. நான் ஏசப்பாவிடம்
திரும்பவும் அவரை கொடுத்து விடுங்கள் என்று அழுது கேட்கிறேன். லாசருவிற்கு செய்த அற்புதம் நம்
வாழ்க்கையில் நடக்கும் என்று விசுவாசித்து ஜெபம் பண்ணுகிறேன். எனக்கு ஆறுதல் பதில்
தருவீங்களா?
*பதில்*
உங்களுடைய
இழப்பை எந்த மனிதராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு.
ஜீவித்திருந்த
போது தனிமையை குறித்தோ இப்படிப்பட்ட ஒரு இழப்பை குறித்தோ அறிய வாய்ப்பில்லாமல் சகல
நாட்களிலும் சந்தோஷமும்,
துக்கமும் கோபமும்,
வைராக்கியமும்,
சொந்த தீர்மானங்களும் நிறைந்து நன்மையான அல்லது சந்தோஷமான சம்பாஷனைகள், கோபமான சம்பாஷனைகள், சிறிதோ பொிதானதோ தேவையான
சகல அன்பையும் கொட்டி வாழ்ந்த நாட்களின் எண்ணங்கள் எப்போதும் நினைவில் மாறி மாறி
இப்போது வந்து கொண்டேயிருக்கும்.
அதை
தவிர்த்திருக்கலாமே இதை விட்டுக்கொடுத்திருக்கலாமே இப்படி செய்திருக்கலாமே அப்படி பேசியிருக்ககூடாதே
என்று இதுவரை நடந்தவற்றை நினைத்து சிந்தனை ஓடிக்கொண்டேயிருக்கும்.
மேலும்
உங்களுக்கு உறுதுணையாக அருகாமையில் எப்போதும் இருக்க வேண்டிய வயது தற்போது.
அற்புதங்களும்
அடையாளங்களையும் செய்ய தேவனுடைய கரம் எப்போதும் வல்லமையுள்ளது. அவரின்
செயல்பாடுகளை யாரால் வகையறுக்க முடியும்?
எழுதும்
படியான வாய்ப்பே (உலகமே) கொள்ளாத அளவிற்கு இயேசுவானவர் அற்புதங்கள் செய்திருந்த போதும் (யோ
20:30, 21:25) தேவனுடைய வல்லமை வெளிப்படும் படியாகவும்,
இயேசுவானவர் தேவனுடைய குமாரன் என்று ஜனங்கள் விளங்கிக்கொள்ளும்படியாகவும்,
மேலே வானத்திலும்,
கீழே பூமியிலும்,
சமுத்திரமும்,
ஆகாயமும், சகலமும் அவருடைய ஆழுகையின் கீழ் இருக்கிறது என்பதை ஊர்ஜீதப்படுத்தும்படியாக
ஏழே ஏழு (7) அற்புதங்களை மாத்திரம் யோவான் புஸ்தகத்தில் நாம் பார்க்க முடியும்.
அவர் சொல்ல ஆகும்,
அவர் கட்டளையிட நிற்கும்.
சங் 33:9
அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத்
தமது ஞானத்தினால் படைத்து,
வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார். அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின்
எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி,
மழையுடனே மின்னல்களை உண்டாக்கி,
காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார். எரே 51:15-16
நியமனப்படி
மனிதர்களாகிய நாம் சரீரத்தில் பிறப்பதும் இறப்பதும் ஒரே தடவை (எபி 9:27)
உங்களை
உண்டாக்கினவரும், உருவாக்கினவரும், துணை செய்வாராக. எதற்கும்
கலங்காமல் தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுகிறவர் சகலவற்றையும்
தாங்கி வழி நடத்துவார் (ஏசா 44:2-3)
இரட்சிக்கப்பட்டவர்கள்
நிச்சயமாக ஆபிரகாம் மடி என்று சொல்லப்பட்ட இடத்தில், இந்த உலகத்தின் பாடுகளையும் வேதனைகளையும்
வெறுப்புகளையும் கோபங்களையும் சண்டைகளையும் நினைக்க வாய்ப்பில்லாமல் சமாதானமாய் இளைப்பாறுவார்கள்
(லூக்கா 16:22)
அப்படியே
எவரும் - நம் இரட்சகராகிய இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து பாவங்கள்
மன்னிக்கப்படும்படியாக ஞானஸ்நானம் எடுத்து கர்த்தருடைய வார்த்தையின் படி வாழ்ந்து
முடிக்கிறவர்களும் நித்தியத்தில் உள்ளவர்களை பார்க்கும் பாக்யம் முடிவில் பெறுகிறோம்
(லூக்கா 16:23)
இயேசு
கிறிஸ்து நமக்கு ஆண்டவரும் கர்த்தரும், இரட்சகரும், மீட்பருமாக இருக்கிறார்.
சகலமும்
அப்பாவாகிய தேவனுக்கே கீழ்பட்டிருக்கிறது. நம்முடைய ஊக்கமான ஜெபத்தை இயேசுவின் பிதா
என்றும் நம்முடைய அப்பா என்று சொல்லப்பட்டவருமாகிய சர்வ வல்ல அப்பாவை நோக்கி ஏறெடுக்கும்
போது எல்லா சமாதானத்தையும் தந்தருளுவாராக
(யோ 20:17, 2தெச 3:16)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக