சனி, 19 அக்டோபர், 2019

#571 - ஆதாம் முழு மனிதனாக உருவாக்கப்பட்டதானால் அவர் வயது எவ்வாறு கணக்கிடப்பட்டது?

#571 - *ஆதாம் முழு மனிதனாக உருவாக்கப்பட்டதானால் அவர் வயது எவ்வாறு கணக்கிடப்பட்டது?*  ஆதியாகமம் 5:3 - ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

*பதில்*
நன்றாக யோசிக்க வேண்டிய ஒரு கேள்வி இது.

ஆதி. 5:5ல் ஆதாம் 930 வயதாகி மரித்தார் என்று வாசிக்கிறோம்.

இது அவர் பிறந்த நாள் துவங்கி அல்ல வாழ்ந்த காலம் என்பதை தெளிவாக அறிய முடியும்.

ஆதாம் *உயிரோடிருந்த காலம்* என்று வசனம் குறிப்பிடுகிறது.

ஆகவே 930 வருடம் என்பது அவர் வாழ்ந்த காலத்தை குறிப்பிடுகிறது என்பதை நாம் அறியலாம்.

ஆங்கிலத்தில் He *Lived* for 930 Years என்று சொல்லப்படுகிறது.

எபிரேயத்தில் காவ்யாயீ என்ற வார்த்தைக்கு வாழ்ந்த காலம் என்பது தமிழ் அர்த்தம்.

மோசேயின் மூலமாக தேவன் நியாயபிரமானத்தை இஸ்ரவேலருக்கு கொடுக்கும் போது வாலிப வயது அல்லது பொியவன் என்ற அந்தஸ்தை 30லிருந்து துவங்குவதை காணலாம் எண். 4:3 (தற்போது அரசாங்கம் 18வயது நிர்ணயித்திருக்கிறது)

ஆதாம் காலத்தில் வாலிபம் என்ற வயது 30 அல்லது அதற்கு மேலேயும் இருந்திருக்கலாம். வேதத்தில் அதற்கான குறிப்பு இல்லை என்றே சொல்லமுடியும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக