#569 - *நன்மை தீமை அறியதக்க கனி எது?*
*பதில்*
எந்த
கனி என்பதை வேதம் குறிப்பிடவில்லை.
நன்மை
தீமை அறியதக்கது என்றால் என்ன என்கிற கோணத்தில் உங்கள் கேள்வியாக இருந்தால்
அதற்கான பதில் கீழே:
மனிதன்
கீழ்படிவதை சோதிக்கும் வண்ணம் இந்த கட்டளை அவனுக்கு கொடுக்கப்பட்டது (ஆதி. 2:16-17)
தேவன்
சொல்வதை அப்படியே கேட்பது நன்மை. கீழ்படியலாமா வேண்டாமா என்று யோசித்த போது
வாழ்வின் நாசத்தை வரவழைத்தது (ஆதி. 3:1-3)
அந்த
கனியை புசித்த போது –
எது தவறு என்பதை அவர்கள் புத்தி உணர்த்தியது (ஆதி. 3:10)
அவர்கள்
அந்த கனியை புசிக்கும் முன்னர் ஒளிந்து இருக்க வேண்டும் என்று அவர்கள் புத்திக்கு
எட்டவில்லை –
மாறாக தேவனோடு சகஜமாக பழகினர் (ஆதி. 3 3:8, 2:15, 23-25)
தீமை
எவை என்பதை யோசிக்கும் திறன் அந்த கனியை புசித்தவுடன் தெரிந்து கொண்டார்கள் (ஆதி. 3:7)
பரிசுத்தத்திற்கு
விலகி ஓட வேண்டும் என்னும் பிரிவை உணர்ந்தார்கள் (ஆதி. 3:8)
அந்த
கனியை புசியாதிருந்தால் –
ஒரு வேளை ஜீவ விருட்சத்தின் கனியை அவர்கள் கண்டுபிடித்து சாப்பிட்டு காலாகாலமாக
வாழ்ந்திருக்க முடியும் (ஆதி. 2:9, 3:22, 24)
தீமையை
அறிவதை அறிந்து கொண்டதால் –
நித்தியத்தை கண்டறியும் நிலைமையை நம் மீது வரப்பண்ணினார் - வெளி. 2:7, 22:1-2, 14, 19
கிறிஸ்துவை
பற்றிக் கொண்ட நாம் ஆதாம் ஆரம்பத்தில் இழந்த அந்த நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கிறோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக