#565 *கேள்வி - ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம்
அவர்களுடையது. மத்தேயு
5:3 - விளக்கவும்*
*பதில்*
இந்த
வசனத்தை வைத்து ஒரு பொிய இயக்கத்தின் ஜனங்கள் தங்கள் மீசையை கூட வளித்து விட்டு
எளிமையாக இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொள்பவர்கள் உண்டு.
தன்
தோளில் அல்லது கரங்களில் தோலால் ஆன பை இருந்தால் அது ஆடம்பரம் என்று சொல்லி துணியால்
ஆன தொங்கல் பைகளை மாத்திரம் (ஜோல்னா பை என்று அதற்கு வழக்க சொல்) தன் தோளில் போட்டுக்கொண்டு
ஊழியம் செய்கிறோம் என்று சொல்வார்கள்.
உண்மையில்
ஆவியில் எளிமையுள்ளவர்கள் என்றால் *ஆவியில் ஏழ்மையுள்ளவர்கள்* என்று பொருள்.
ஆங்கிலத்தில்
வாசிப்பவர்களுக்கு இலகுவாக புரியும். Blessed
is the man who is poor in Spirit என்பதே.
ப்தோகோஸ்
என்ற கிரேக்க வார்த்தைக்கு ஏழ்மை அல்லது பிச்சைகாரர் அல்லது அத்தியாவசியமாக தேவைக்காக
அலைபவர் என்பது தமிழ் அர்த்தம்.
வசனத்தின்படி
எந்த ஒரு மனிதன் தேவ வார்த்தையில் தான் குறைவு பட்டவன், இன்னும் தேவ வார்த்தையில்
வளர வேண்டும், இன்னும்
தேவ வார்த்தையில் தான் பூரணமடைய வேண்டும் என்று ஆர்வத்தோடு தான் இது வரை பெற்ற தேவ
ஆவியின் அளவு குறைவாகவே இருக்கிறது என்று ஏங்கி ஏங்கி அதை தேடுகிறாரோ – அவர் நிச்சயம் வசனத்தின்படி
வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்டவர்களுடையது தான் பரலோகம் என்றார் நம்
ஆண்டவர் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/GTYCEzS5IEZBnAllvlLT4R
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக