#564 - *வேதத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ள பிரியப்படுகிறேன். எப்படி அறிந்து
கொள்வது?*
*பதில்*
வேதத்தை
குறித்த இரகசியம் என்ற பதத்தில் தமிழ் மொழிபெயர்ப்பு வேதத்தில் 6 இடங்களில்
வருகிறது.
யோபு
11:6, லூக்கா 8:10, 1கொரி. 4:1, 1கொரி. 13:2, 1கொரி. 14:2 & 1கொரி. 14:6
ஆனால்
மூஸ்தேரீயான் என்ற கிரேக்க பதத்தில் சொல்லப்படும் இரகசியம் என்ற தமிழ் அர்தத்திற்கு
27முறை புதிய ஏற்பாட்டில் மாத்திரம் காணமுடிகிறது.
இந்த
கிரேக்க வார்த்தையின் தீவிர அர்த்தங்கள்:
மறைக்கப்பட்டவை
/ மறைபொருள் / இரகசியம் –
குறிப்பாக ஆவிக்குறிய அல்லது தேவனக்குறியவை என்று அர்த்தங்கொள்ளும் வார்த்தை இந்த
மூஸ்தேரீயான்.
குறிப்பான
சில வசனங்களை பதிவிடுகிறேன் :
ரோ.
11:25 மேலும், சகோதரரே, நீங்கள்
உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு *இரகசியத்தை
நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்*; அதென்னவெனில்,
புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக்
கடினமான மனதுண்டாயிருக்கும்.
ரோ. 16:25-27
ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து,
இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி
வெளியரங்கமாக்கப்பட்டதும்,
சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு *அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற
இரகசியத்தை*
வெளிப்படுத்துகிறதான, இயேசுகிறிஸ்துவைப்பற்றிய
பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும், தாம் ஒருவரே
ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும்
மகிமை உண்டாவதாக. ஆமென்.
1கொரி. 2:7-10
உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், *மறைக்கப்பட்டதுமாயிருந்த
இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்*. அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில்
ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின்
கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு
ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை,
காது கேட்கவுமில்லை,
அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே
வெளிப்படுத்தினார்;
அந்த ஆவியானவர் எல்லாவற்றையும்,
தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
எபே. 3:3 அதென்னவெனில்
புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள்
அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற *இந்த
இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்*.
தேவ
இரகசியம் என்று சொல்லப்படுவது இரட்சிப்பு.
அதை
தேவன் மறைத்து வைக்காமல் சகலத்தையும் நமக்கு ஏற்கனவே அறிவித்திருக்கிறார் !!
தேவ
இரகசியம் சொல்கிறேன் என்று ஒருவர் பிரசங்கித்தால் அது வேதத்தில் ஏற்கனவே எழுதப்பட்டதாக
இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர் பொய் சொல்கிறவர் – 1கொரி. 4:6, நீதி. 30:6, வெளி. 22:18, 2தீமோ. 3:16-17, யோ. 20:31
வேதத்தில்
சொல்லப்பட்ட / வெளிப்படுத்தப்பட்ட இரகசியாமகிய விலையேறப்பெற்ற தேவனுடைய இரட்சிப்பின்
முதல் படியை (அப். 22:16) நீங்கள்
அடைந்தாயிற்றா?
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக