வெள்ளி, 4 அக்டோபர், 2019

#533 - என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தார் - விளக்கவும்

#533 - *என் தாய் என்னை பாவத்தில் கற்பம் தரித்தார் என்று தாவீது சொல்கிறார். இதைப் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.*

இந்த வசனம் நாம் பிறக்கும்போதே பாவிகள் என பாவிக்கிறதா இல்லை தாவீது உடைய தாய் தாவீதை பாவத்தில் கற்பம் தரித்தாரா?

*பதில்*
இந்த பாடல் முழுவதுமே தன்னுடைய பாவ அறிக்கையின் பாடலாக இருப்பதை கவனிக்க வேண்டும்.

தாவீது ான் செய்த பாவம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதை உணர்ந்ததன் விளைவாக இடிந்து நொருங்கிப் போய், தன் பாவ அறிக்கையை தேவன் முன்னதாக வைக்கிறார்.

தன்னை நியாயப்படுத்தும் நோக்கில் அல்ல, மாறாக ஒப்புதல் வாக்குமூலத்தை நிறைவு செய்வதாகும்.

அவர் சொன்னது போல், நான் இதை ஒரு முறை பாவம் செய்தேன், ஆனால் நான் என் இயல்பிலேயே ஒரு பாவி. என் வாழ்க்கையின் நீரூற்று மாசுபட்டதுடன் அதன் நீரோடைகளும் அப்படியே உள்ளன என்கிறார்.

எனது பிறப்பு-தன்மையே நீதியின் சதுரத்திற்கு வெளியே உள்ளன; நான் இயல்பாகவே தடைசெய்யப்பட்ட விஷயங்களுக்கு சாய்ந்து கொள்கிறேன். என்னுடையது ஒரு தன்னிலையான பாவ மனகோட்பாட்டிற்கு ஏற்றபடி சாயும் ஒரு நோயாகிவிட்டது.

என் சரீரமே உமது கோபத்திற்கு அருவருப்பானது. மேலும், நான் கருத்தரித்த நாளில் இருந்தே பாவம் செய்கிறவனை போலானேன் என்று தன் மூலாதாரமே பாவமாயிருக்கிறது என்று தன்னை தேவனுக்கு முன்பாக ஆரம்ப காலத்திற்குத் திருப்பிச் சென்று தாழ்த்துகிறார்.

தனது தாயைக் குற்றப்படுத்தில் அல்ல, மாறாக அவர் செய்த பாவத்தின் ஆழமான வேர்களை ஒப்புக்கொள்வதற்காக.

தாவீதின் தாய் கர்த்தருடைய மகள், அவர் ஒரு நல்ல தந்தையின் தூய்மையான பரிசுத்த விவாகத்தில் பிறந்தார்.

கர்ப்பம் உருவாவது தேவனுடைய அநுக்கிரகத்தால். ஒரு குழந்தை பெற்றெடுப்பது தேவனுடைய சுதந்திரம் என்று வேதம் சொல்கிறது (சங் 127:3)

திருமணம் செய்வதும் குழந்தை பிறப்பதும் தேவனுடைய பரிசுத்த திட்டத்தில் விலையேறப்பெற்றவை (ஆதி. 1:28)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2/

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக