திங்கள், 23 செப்டம்பர், 2019

#495 - விபத்தில் பலி ஆகுபவர் மரித்த பின் எங்கு செல்லுவார்கள் ஐயா

#495 - *விபத்தில் பலி ஆகுபவர் மரித்த பின் எங்கு செல்லுவார்கள் ஐயா*

*பதில்*
தேவனுடைய சித்தம் இல்லாமல் எவருக்கும் மரணம் நேரிடுவதில்லை (அப் 27:34)

பரிசுத்த ஆவியானவர் யோபு மூலமாக மிக அழகாக எழுதுகிறார் யோபு 14:5 அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.

விபத்தில் மரித்தாலும் சாதாரணமாக மரித்தாலும் கடைசி சுவாசம் இருக்கும் போது அவர் கிறிஸ்துவின் வார்த்தையில் நிலைத்திருப்பவரானால் நிச்சயம் பரலோக பாதையில் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. யூதா 1:21

இரட்சிப்பின் பாதையை அறிந்தும் கீழ்படியாமல் இருக்கும் பட்சத்தில் உள்ளவர்கள் சாக்கு போக்கு சொல்ல இடமில்லை (ரோ 1:20)

தேவன் நியாயந்தீர்க்கிறவர் என்று வெறுமையாக வேதத்தில் இல்லாமல் நீதியாய் நியாயந்தீர்க்கிறவர் என்றும் பார்க்கிறோம். (வெளி 19:11)

ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக. பிலி 3:16

இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். எபி 4:7

நமக்கு இதுவரை ஜீவனையும் சுவாசத்தையும் தந்த தேவனுக்கு நன்றி செலுத்தி அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து விசுவாசித்து மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று அவருடைய வருகைக்கோ / நமது கடைசி மூச்சுக்காக தயாராக இருப்போம்.

இந்த அருமையான கேள்விக்காய் நன்றி

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக