#493ன் பதிலில் சில காரியங்கள் முரண் பாடாக உள்ளது.. கொரிந்தியர் உள்ள வசனத்தின் அடிப்படையில் ஏற்கனவே நிங்க சொன்னதை மாற்ற
கூடாது.. அதை நிலை நாட்ட வேண்டும் என்கிற ஒரு நோக்கம் மட்டுமே இருக்கிறதை உங்கள்
பதிவில் பாகம் 2 காண்பிக்கிறது.....
அவர்கள் என்பது 12 அப்போஸ்தலர்களை மட்டும் அல்ல, கூடியிருந்த
அனைவரையும் தான் குறிப்பிடும்.....
இப்போது ஒரு கூட்டம் நடத்திகிறார்கள்
என்றால் ஒரு 5 பாஸ்டர் அத்தோடு ஒரு 500 விசுவாசிகள் கூடுகிறார்கள்
என்றால்.. அக் கூட்டத்தை பற்றி எழுதும்
மீடியாக்கள். அவர்கள் இந்த இடத்தில் கூடி ஆராதித்தார்கள்
என்று தான் சொல்லுவார்கள்.... அப்போ பொதுவாக 505 பேர்களையுமே குறிப்பிடும் தவிர
அந்த 5 பாஸ்டர மட்டும் குறிப்பிடாது......
தனியாக குறிப்பிடும் போது இவர்கள் மட்டும் என்று சரியான இலக்கத்துடனே
சொல்வார்கள்..... ஆக அங்கு ஒவ்வொருவர்
மேலும் என்று வசனம் தெளிவாக குறிப்பிடுகின்றது...
அப்போ 2.3
குறிப்பிட்ட இலக்கம் இல்லை.. அவர்கள் என்று பன்மையில் உள்ளது 120
பேரும் தான்......
12 என்ற இலக்கம் அங்கு இல்லை 120 பேர்
( ஒவ்வொருவர் மேலும்)
கொரிந்தியரில் திட்டம் பண்ணின நடைமுறை ஒழுங்குகள் சரி அதே சமயம் தேவன் எல்லார்
மேலும் ஒரே சமயத்தில் இறங்கி ஆட்கொண்டாலும் அதை ஒருவராலும் தடுக்க முடியாது.
தடுக்கவும் கூடாது......
மோசே காலத்தில் 70 பேர் மீதும் கர்த்தர் உடைய ஆவியானவர் இறங்கினார்...
ஒருமித்தே தீர்க்க தரிசனம் உரைத்தார்கள்.
கொர்நெலியு வீட்டில்
44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில்
வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
அப்போஸ்தலர் 10:44
45 அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,
அப்போஸ்தலர் 10:45
யாவர் மேலும் இறங்கினார் பல பாஷையில் ஒருமித்தே ஆவியில் நிரம்பி பேசினார்கள்.....
எனவே இரு விதத்திலும் ஆவியின் நிரப்புதல் உண்டு என்பது மறுக்க முடியாத
உண்மை.
*பதில்*
உங்கள்
கேள்விக்கு நன்றி சகோதரரே.
சொந்த
கருத்தை நிலைநாட்ட நான் எழுதியிருந்தால் அத்தனை வசன ஆதாரத்தோடு ஒப்பிட்டுருக்க அவசியமிருந்திருக்காது.
நீங்கள்
சொல்வது போல 2:1ல் அவர்கள் என்பது 120பேரும் உடன் பட்டிருந்தால் – அடுத்து உள்ள
நிகழ்வுகளை நீங்கள் கவனிக்கவும் தவற கூடாது. அதையும் என்னுடைய #493ற்கான பதிலில்
குறிப்பிட்டுள்ளேன்.
*கீழே
அதை பட்டியலிட்டிருக்கிறேன் கவனிக்கவும்*:
அப்போஸ்தலர்கள்
"கலிலேயர்கள்" என்று குறிப்பிடப்படுகிறார்கள், அப்போஸ்தலர் 2:
7.
ஆகவே, கலிலேயர்கள்
"யூதேயா" மனிதர்களிடம் பேசினார்கள் அப்போஸ்தலர் 2:14 - அப்பொழுது *பேதுரு பதினொருவரோடுங்கூட*
(1+11) நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: *யூதர்களே*, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும்
அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச்
செவிகொடுங்கள்.
அப்போஸ்தலர்கள்
"*இஸ்ரவேல்*" மனிதர்களிடம் பேசினார்கள்
அப்போஸ்தலர் 2: 22 - *இஸ்ரவேலரே*, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்….
ஜனங்கள்
பேதுருவின் பேச்சைக் கேட்டு,
இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, *பேதுருவையும்
மற்ற அப்போஸ்தலரையும்* (1+11) பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்." (அப்போஸ்தலர் 2:37).
அப்போஸ்தலர்களிடம்
இதைச் சொன்னதாக வசனம் கூறுகிறது என்பதை தயவுசெய்து கவனிக்கவும்!
மேலும்
இந்த சம்பவத்தின் நிகழ்வுக்காக பிரத்யட்சமாக – கட்டாயமாக ஊரை விட்டு வெளியே
போகாமல் காத்திருக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலருக்கு
கட்டளையிடப்பட்டார் (120 பேருக்கு அல்ல) –
அப்
1:4-5 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, *அவர்களை
நோக்கி*: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; *நீங்கள்*
சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள்
எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம்
நிறைவேறக் *காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்*.
அப்போஸ்தலர்களிடம்
இதைச் சொன்னதாக வசனம் கூறுகிறது என்பதை தயவுசெய்து கவனிக்கவும்!
120
பேர் கூடியிருந்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வேதமே சொல்கிறது. (1:15)
ஆனால்
வாக்குதத்ததை பெற்று கொண்டது 12 பேர் என்ற ஆதாரம் இந்த 1& 2ம் அதிகாரம்
முழுவதும் நிரம்பியிருக்கிறது.
தேவனுடைய
மகத்துவத்தை ஒருவரும் குறைத்து மதிப்பிட கூடாது.
குறிப்பிட்ட
காரியங்களின் வசனத்தை கூட்டியும் புரிந்து கொள்ளமுடியாது.
கொர்நெலியூ
வீட்டில் நடந்த சம்பவமும் 2ம் அதிகாரத்தில் நடந்த சம்பவத்திற்கும் நோக்கம் வேறே.
பொருமையாக
வார்த்தை வார்த்தையாக அடிக்கோடிட்டு *வேதத்திலிருந்து* ஒப்பிட்டு படிக்கவும். வசனத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக